“ரிஷப் பண்ட் மாதிரி வந்திருக்க வேண்டிய ஆளு நீ.. இந்த மாதிரி பண்ணி காணாமயே போய்ட்டியே பா” இந்திய வீரர் கடுமையாக விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!!

0
250

ரிஷப் பண்ட் போல நன்றாக வந்திருக்க வேண்டியவர் சஞ்சு சாம்சன். ஆனால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்புவதற்கு நிச்சயம் சஞ்சு சாம்சன் சரியான வீரராக இருப்பார் என்று பலராலும் கருதப்பட்டு வந்தது. மேலும் அந்த சமயம் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு சரியான வீரர் இல்லை. அதனை நிரப்பவும் இவர் மிகச்சரியான வீரராக இருப்பார் என்று கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், இந்திய அணியில் ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் பொழுதும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. 

- Advertisement -

ஒருசில போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் எதிர்பார்த்த அளவிற்க்கு செயல்படவில்லை என்பதால், அணியில் இருந்து அவ்வப்போது புறக்கணிக்கப்பட்டும் வந்தார். 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் இதுவரை 14 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். டி20 போட்டிகளில் 251 ரன்கள், ஒரு நாள் போட்டியில் 58 ரன்களும் அடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் இவர் மீது கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா முன் வைத்திருக்கிறார்.

சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கிடைத்த மற்றும் ஒரு வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார். பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானமாக இது இருந்தபோதும் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்திருக்கிறார். தற்போது இந்திய அணியில் முன்னணி வீரராக உருவாகி வரும் ரிஷப் பன்ட் அளவிற்கு சஞ்சய் சாம்சன் வந்திருக்க வேண்டும்ன் நிலையற்ற ஆட்டத்தினால் அவரால் அணியில் இடம் பிடிப்பதே குதிரை கொம்பாகியுள்ளது. 

சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் போன்றோர் தங்களது இடங்களை தக்க வைத்துள்ளனர். இவர்களுக்கு மூத்த வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தினால் பின்னடைவை சந்தித்து வருகிறார். 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கிடைத்த வாய்ப்பு எல்லாம் அதிக அளவு ரன்களை அடித்து தனது இடத்தை தக்கவைக்க பயன்படுத்திக் கொள்ளாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிப்பை உள்ளாக்கலாம்.” என்றார்.

- Advertisement -