பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் உலக கோப்பை சோகம்.. இங்கிலாந்து எளிதாக வென்றது.. சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு!

0
1895
Pakistan

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தகுதி பெற வேண்டிய நிலைமை இருந்தது.

- Advertisement -

எனவே பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக இருந்தால், பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட ரன் ரேட் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, போட்டி துவங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தானின் அரைஇறுதி வாய்ப்பை முடித்து விட்டது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மலான் 31, ஜானி பேர்ஸ்டோ 59, ஜோ ரூட் 60, பென் ஸ்டோக்ஸ் 84, ஜோஸ் பட்லர் 27, ஹாரி புரூக் 30 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எல்லாமே ஏமாற்றமாக அமைந்தது. அப்துல்லா ஷபிக் 0, பகார் ஜமான் 1, பாபர் அசாம் 38, முகமது ரிஸ்வான் 36, சவுத் சகீல் 29, ஆகா சல்மான் 51, ஷாகின் அப்ரிடி 25, முகமது வாசிம் 16*, ஹாரிஸ் ரவுப் 35 ரன்கள் எடுக்க, 43.3 ஓவரில் பாகிஸ்தான அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முடிவில் இங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை 93 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தகுதியையும் இங்கிலாந்து பெற்றது. டேவிட் வில்லி இங்கிலாந்து தரப்பில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இரண்டு அணிகளுக்கும் நடப்பு உலகக் கோப்பைத் தொடர் மோசமாக அமைந்திருக்கிறது.

கடைசி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஒரு முறை மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் கடைசியாக மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!