ரிஷப் பண்ட் இல்லாதது மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு போகாததுக்கு காரணமா? – வெளிப்படையாக பேசிய ரிக்கி பாண்டிங்!

0
274

இந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எது சரியாக அமையவில்லை? ஏன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை? என்பதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் அணியின் கோச் ரிக்கி பாண்டிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள் சந்தித்து ஆரம்பித்தது. அதற்கு அடுத்த ஐந்து போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே பெற்றது. இதனால் மீண்டும் தொடருக்குள் வந்து விட்டார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்தபோது கடைசி இரண்டு போட்டிகளில் இரண்டையும் இழந்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்கள்.

- Advertisement -

மீதமிருக்கும் கடைசி இரண்டு லீக் போட்டிகளை சம்பிரதாயபடி விளையாடி வருகிறது டெல்லி அணி. இதில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ள அணிகளுக்கு அப்செட்டாக அமையலாம்.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணைக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் எதனால் சரியாக அமையவில்லை? எந்த இடத்தில் தவறுகள் நேர்ந்தது? என்பது பற்றி தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

“இப்படிப்பட்ட ஒரு சீசனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய பேட்டிங் உரிய தரத்திற்கு இல்லை. தொடர் முழுவதும் நம்பிக்கை அளித்த ஒரு விஷயம் பந்துவீச்சு நன்றாக இருந்தது மட்டுமே. இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஆங்காங்கே பல தவறுகளை செய்துவிட்டோம்.

- Advertisement -

தொடர்ச்சியாக அத்தனை தோல்விகளை சந்தித்த பிறகு மீண்டும் வெற்றிக்கு திரும்புவது அவ்வளவு எளிதல்ல. அத்துடன் இந்த சீசனில் சரியான பிளேயிங் லெவனை கண்டறிவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். நடுவில் மிட்ச்சல் மார்ஸ் தனது கல்யாணத்திற்காக நாட்டிற்கு சென்று விட்டார். அதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. நார்க்கியா சொந்த காரணங்களுக்காக நாட்டிற்கு சென்று விட்டு திரும்பினார். இதனால் அவரும் சில போட்டிகள் விளையாடவில்லை. இந்த தொடர் முழுவதும் உரிய பிளேயிங் லெவனை கண்டறிவதற்கு தடுமாறி வருகிறோம்.” என்றார்.