இந்திய கிரிக்கெட்

கில்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. ஆனா இந்த 2 டீம்தான் சாம்பியன்ஸ் டிராபிய வெல்லும் – ஹாசிம் ஆம்லா பேட்டி

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹாசிம் ஆம்லா இந்திய இளம் வீரர் கில் பற்றியும் மேலும் எந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்றும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆறு நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வென்ற காரணத்தினால் தொடரின் கணிப்புகள் மாறி இருக்கிறது. மேலும் தற்போது நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா வலிமையான அணிகளாக தெரிவதும் குறிப்பிடத்தக்கது.

கில் அடுத்த சிறந்த வீரராக இருப்பார்

இதுகுறித்து பேசி இருக்கும் தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் நட்சத்திர வீரர் ஹாசிம் ஆம்லா கூறும்பொழுது “இந்தியாவைப் பொறுத்தவரை உங்களுக்கு தற்போது கில் கிடைத்திருக்கிறார். சில காலமாக உங்களுக்கு ரிஷப் பண்ட் மாதிரியான இளம் திறமைசாலி ஒருவர் இருக்கிறார். எங்களிடம் ரியான் ரிக்கல்டன் இருக்கிறார். அவர் கொஞ்சம் தாமதமாக சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்”

“ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று சிறந்த வீரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் ஒரு இளம் வீரர் சிறப்பான முறையில் விளையாடுவார். தற்போது உள்ளது படி கில் அடுத்த சிறந்த வீரராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது”

- Advertisement -

இந்த இரண்டு அணிகள் கோப்பையை வெல்லும்

“கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக இருப்பது, இது சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான தொடக்க கூட்டணியாக மாறுகிறது. மேலும் இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி வந்து விடுகிறார். எனவே இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது”

இதையும் படிங்க : குரங்குகள் கூட இதை செய்யாது.. இம்ரான் கானா இருந்தா எங்களை விடமாட்டார் – வாசிம் அக்ரம் விமர்சனம்

“இந்தியாவுக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. தற்போதுள்ள அணியில் சரியான பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் இருக்கிறது. சிறந்த வீரர்களைக் கொண்ட கலவையாக அணி தெரிகிறது. நிச்சயமாக இந்த அணி அரை இறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் வெளிப்படையாக இருக்கிறது. மேலும் இந்த அணியால் கோப்பையை வெல்லவும் முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by