ஜெய்ஸ்வால் கிரிக்கெட் உலகை காலடியில வச்சிருக்காரு.. எங்கள மாதிரி கிடையாது – கவாஸ்கர் பாராட்டு

0
340
Gavaskar

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருந்தார்.

- Advertisement -

பல்வேறு சாதனைகளைப் படைத்த ஜெய்ஸ்வால்

இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 90 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இந்த வருடத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பில் பங்கேற்று இருக்கிறார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த மெக்கலம் சாதனையை 34 சிக்ஸர்கள் அடித்து ஜெய்ஸ்வால் இன்று முறியடித்தார். தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை ரன்கள் ஏதும் இல்லாமல் தோல்வியாக ஆரம்பித்து இருந்தாலும் உடனே சுதாரித்து தற்பொழுது சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் காலடியில் கிரிக்கெட் உலகம்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் மிகவும் ஸ்பெஷல். இவர் பேட்டிங் செய்யும் விதம் இவர் கையாளும் விதம், இவர் எங்கிருந்து வந்தார் என ஆச்சரியப்பட வைக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். அவர் ரன்கள் எடுக்க பசியுடன் இருக்கிறார். நாங்கள் சதம் அடிக்க விரும்புகிறோம். ஆனால் அவர் 150 ரன்கள் 200 ரன்கள் என பெரிய சதங்கள் அடிக்க விரும்புகிறார்”

இதையும் படிங்க : காமன்சென்ஸ் இருந்தா.. ரோகித் சர்மா வந்தா இதை செய்யுங்க.. திரும்ப தப்பு பண்ணாதிங்க – இந்திய முன்னாள் வீரர் அறிவுரை

“அவருக்கு இருக்கும் ரன் பசிதான் இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையாக இருக்கிறது. ஒரு இடது கை ஆட்டக்காரர் பந்துவீச்சாளர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியவர். அவர் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டு வருகிறார். அவர்தான் விரும்பும் ஷாட்டை விரும்பும் வகையில் விளையாடுகிறார். ஜெய்ஸ்வால் கிரிக்கெட் உலகத்தை தனது காலடியில் வைத்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -