கம்பீரை தப்பா விமர்சனம் செய்யக்கூடாது.. அவரோட உண்மையான குணம் இதுதான் – ஹர்ஷித் ராணா பேட்டி

0
38

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரும், இந்திய முன்னாள் வீரருமான மனோஜ் திவாரி கௌதம் கம்பீர் குறித்து பேசியதற்கு மற்றொரு இந்திய வீரர் ஹர்சித் ராணா அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் ஒரு நயவஞ்சகர்

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்ததோடு அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரிலும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கம்பீர் 2012 மற்றும் 14ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது அந்த இரண்டு ஆண்டுகளும் அவரது தலைமையில் ஐபிஎல் கோப்பைகளை வென்றது.

இந்த நிலையில் முன்னாள் கேகேஆர் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான மனோஜ் திவாரி கம்பீர் ஒரு நயவஞ்சகர் என்றும், அந்த இரண்டு ஆண்டுகளும் ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு அணி வீரர்களும் முக்கிய காரணம் என்றும் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு வீரரான ஹர்ஷி த்ராணா கம்பீர் குறித்து தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

வீரர்களை எப்போதும் ஆதரிப்பார்

இது குறித்து அவர் கூறும் பொழுது
“தனிப்பட்ட பாதுகாப்பின்மை காரணமாக ஒருவரை விமர்சிப்பது நல்லதாக இருக்காது என்று நினைக்கிறேன். கௌதி பையா தன்னைவிட மற்றவர்களுக்காகவே அதிகம் சிந்திப்பார். வீரர்கள் தோல்வியடையும் போது அவர்களை எப்போதும் ஆதரிப்பார். அதே வேளையில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் தயங்க மாட்டார். இதை அவர் பல சந்தர்ப்பங்களில் காட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியை அசர வைத்தார் உண்மைதான்.. ஆனா இனி இந்த விஷயத்தை செஞ்சா மாட்டிக்குவாரு – ரவி சாஸ்திரி

ஆட்டங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து அறிவு அவருக்கு நிறைய இருக்கிறது” என்று கூறுகிறார். இது மனோஜ் திவாரி கூறிய கருத்துக்கு ஹர்சித் ராணா பதிலடி தெரிவிப்பது போன்றே அமைந்திருக்கிறது. ஹர்சித்ரானா முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். அப்போது ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் அதற்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹரிசித் ரானாவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -