நான் செலக்ட்டாக காரணம் கம்பீர் பையாதான்.. அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது இதைத்தான் – ஹர்ஷித் ராணா பேட்டி

0
378
Harshit

இன்று இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இரண்டு தொடர்களுக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் 22 வயதான ஹர்ஷித் ராணா பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கவுதம் கம்பீர் மிக முக்கியமான காரணமாக இருந்தார் என ஹர்ஷித் ராணா கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் அவர் மொத்தமாக 19 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் முதல்முறையாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இதற்கு மிக முக்கிய காரணமாக கவுதம் கம்பீரை கூறியிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக ஹர்ஷித் ராணாவுக்கு மனரீதியாக உறுதியாக இருக்க நிறைய உதவிகள் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஹர்ஷித் ராணா கூறும்பொழுது “நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் ஜூனியர் அணிகளில் நான் தேர்வு செய்யப்படாத பொழுது, மேலும் நான் காயமடைந்த பொழுது நிறைய புலம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு மூன்று பேர் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். ஒருவர் என் தந்தை, இன்னொருவர் என் தனிப்பட்ட பயிற்சியாளர் அமித் பண்டாரி ஸார். இன்னொருவர் எல்லோருக்கும் மேலாக கவுதம் கம்பீர் பைய்யா.

- Advertisement -

விளையாட்டைப் பற்றிய என் பார்வை மாறியதற்கு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் கம்பீர் பைய்யா இருந்தது மிக முக்கியமான காரணம். உயர் மட்டத்தில் விளையாடுவதற்கு உங்களுக்கு திறமைகள் வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக அழுத்தத்தை கையாள்வதற்கு வலிமையான இதயம் வேண்டும்.

இதையும் படிங்க : பைனலில் என் ஒரே ஓவரில் 24 ரன்.. ரோகித் என்கிட்ட வந்து சொன்னது இதுதான்.. நெகிழ்ந்துட்டேன் – அக்சர் படேல் பேட்டி

கம்பீர் பைய்யா என்னிடம் எப்பொழுதும் ‘நான் உன்னை நம்புகிறேன் உன்னால் வெற்றி பெற முடியும்’ என்று கூறுவார். மேலும் அழுத்தத்தை சமாளிப்பது பற்றி அவர் ‘என்ன மோசமான விஷயம் நடக்கும்? நீங்கள் அதிக ரன்கள் தர வேண்டியது வரலாம். நாம் போட்டியில் தோல்வி அடையலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய பயத்தை எதிர்கொள்ளாவிட்டால் எப்படி உங்களால் இதையெல்லாம் சமாளிக்க முடியும்?’ என்று கூறுவார். ஒரு புதிய நாள் ஆரம்பிக்கும், புது மேட்ச் நடக்கும். அங்கு விஷயங்கள் மாறும். அதற்காகத்தான் பயிற்சி செய்கிறோம் என்பதை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -