பைனலில் என் ஒரே ஓவரில் 24 ரன்.. ரோகித் என்கிட்ட வந்து சொன்னது இதுதான்.. நெகிழ்ந்துட்டேன் – அக்சர் படேல் பேட்டி

0
859

இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் அதன் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை.

உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்பட்ட அக்சார் பட்டேல் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும்,  இறுதிப்போட்டியில் தான் பந்து வீச்சில் அடி வாங்கிய போது ரோகித் சர்மா கூறிய வார்த்தைகள் குறித்தும் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் ஆல் ரவுண்டர்களோடு சேர்த்து மொத்தமாக நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே கூடுதலாக எதற்கு நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற கேள்வியை இந்திய முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் எழுப்பினர். இதற்கான பதிலை உலக கோப்பையில் பார்ப்பீர்கள் என்று ரோஹித் சர்மா ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த நிலையில் சகாலை பேக் அப் பந்து வீச்சாளராக அமர்த்திவிட்டு, ஜடேஜா, அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்தனர். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை விட அக்சர் பட்டேலின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிதளவில் உதவியது. பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அக்சாரை, ரோகித் சர்மா இக்கட்டான சூழ்நிலைகளில் நன்றாக பயன்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ரோகித் சர்மா குறித்து பேசிய அக்சர் படேல் “இறுதிப் போட்டியில் கிளாசன் எனக்கு எதிராக ஒரே ஓவரில் 24 ரன்கள் குவித்து ஆக்ரோஷமாக விளையாடிய போது ரோஹித் சர்மா என்னை அணுகி ‘பரவாயில்லை நீங்கள் உங்களது சிறந்த பந்துவீச்சைதான் வெளிப்படுத்தினீர்கள். அவர் ஒரு நல்ல ஷாட்டை விளையாடினால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அதனால் அடுத்த பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்று கூறினார். நான் அந்த ஓவரை வீசி முடித்ததும் ரோகித் சர்மா என் தோளில் தட்டி ‘பரவாயில்லை கவலைப்படாதே’ என்று என்னை ஆறுதல் படுத்தினார்.

ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டன். உலக கோப்பையில் அவரது கேப்டன்சியை கவனித்தால் அவரிடம் ஒரு செட் பார்முலாவை நீங்கள் கண்டறிய முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுப்பார். பவர் பிளேவில் நான் இரண்டு ஓவர்களை வீசுவேன். இல்லையென்றால் ஆரம்பத்தில் பும்ரா வீசுவார். இது குறிப்பிட்ட ஒரு முறை மட்டுமே நடக்காது.

இதையும் படிங்க:சூரியகுமார் புதிய கேப்டன்.. ஹர்திக் பாண்டியாவை ஒதுக்க உண்மை காரணம் என்ன?.. வெளியான தகவல்கள்

அதேபோல பேட்டிங்கிலும் நான் எப்போதும் டாப் ஆர்டரில் விளையாடுவதில்லை. குறிப்பாக இறுதிப்போட்டியில் சிவம் துபே ஹர்த்திக் பாண்டியாவுக்கு முன்னதாக பேட்டிங் செய்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் எந்த பேட்ஸ்மேனைக் களம் இறக்கினால் அது அணிக்கு நன்றாக அமையும் என்பதையும் அறிந்து வைத்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -