விராட் கோலி பற்றி ஹர்ஷா போக்லே எழுப்பிய சந்தேகம்.. ரசிகர் தந்த அசத்தல் புள்ளிவிவரம்.. தோனி ரோகித் பின்னாடி

0
48
Virat

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே 200க்கும் மேற்பட்ட ரன்களை திறக்கும் பொழுது விராட் கோலி என்ன செய்வார் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக சந்தேகம் எழுப்பி இருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அதிரடியான புள்ளி விவரங்களுடன் பதில் அளித்திருக்கிறார்.

பொதுவாக கிரிக்கெட் உலகில் ரன் துரத்துவது என்பது எப்பொழுதும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கக் கூடியது. ஆனால் விராட் கோலிக்கு மட்டும் அது மிகவும் சுலபமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. விராட் கோலி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது களத்தில் இருந்தால் எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருந்திருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி நின்றால் என்ன நடக்கும்?

ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் விராட் கோலி ஒரு பக்கம் நின்று விளையாடி அணியை அதிரடியாக எடுத்துச் சென்று ஜெயிக்க வைப்பார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த முறையில் விளையாடியிருப்பார். இன்றும் விராட் கோலியின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆக இது பார்க்கப்படுகிறது.

அதேபோல தான் அதிரடியாக விளையாடாமல் எதிரில் இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ரன் அடிக்க விட்டு விராட் கோலி மெதுவாக ஆட்டத்தை நகர்த்திச் செல்வார். நேற்று இதே போல குர்னால் பாண்டியாவை அதிரடியாக ஆடவிட்டு ஒரு பக்கத்தில் விராட் கோலி மிக மெதுவாக அரை சதம் அடித்தார். அந்த நேரத்தில் ஆர்சிபி அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ரன் துரத்தும் போது எப்படி தான் அதை அணுகுகிறேன் என விராட் கோலி பேசி இருந்தார்.

- Advertisement -

ரசிகரின் அசத்தல் பதில்

இதுகுறித்து ஹர்ஷா போக்லே கூறும் பொழுது “நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் கோலி கொடுத்து இருந்த பேட்டி மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. 160 முதல் 180 ரன்களை திறக்கும் பொழுது அவர் எப்படி மாஸ்டராக இருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. அவரது சிந்தனை துல்லியமானதாகவும் அவரது கவனம் அசைக்க முடியாததாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் 200 முதல் 220 ரன்கள் துரத்தும் பொழுது அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஒரு ரசிகர் ஒரு அற்புதமான புள்ளி விபரத்தை காட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதில் ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனியை விட 200 முதல் 220 ரன்கள் துரத்தும் பொழுது விராட் கோலி மிகவும் அதிரடியாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரபல பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு மத்திய அரசு தடை

டி20ல் 200+ சேசிங்
கோஹ்லி: 195 ரன்கள் | 49 சராசரி | 164 SR
ரோஹித்: 138 ரன்கள் || 15 சராசரி | 129 SR
தோனி: 163 ரன்கள் | 33 சராசரி | 135 SR

- Advertisement -