“ஹாரி ப்ரூக் இல்லாதது இந்தியாவுக்கு பெரிய சாதகம்.. அவருக்கு சரியான வீரர் இவர்கள்தான்” – நாசர் ஹுசைன் கருத்து

0
68
Brook

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் துவங்குகிறது.

தொடர்ந்து நடைபெறும் இந்த தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மேட்ச் மார்ச் மாதம் ஏழாம் தேதி இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று முடிகிறது.

- Advertisement -

இரு பெரிய அணிகள் மோதிக் கொள்வதாலும், மேலும் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு இரண்டு அணிகளுக்கும் இது மிக முக்கியமான தொடராக அமைந்திருப்பதாலும், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அதிரடியாக அணுகி வருவதாலும், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே அணியை அறிவித்ததோடு, சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அபுதாபி வரை சென்று, பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி பெற்றது.

இப்படியான நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி புரூக் குடும்ப சூழலின் காரணமாக திடீரென அணியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்று இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக டான் லாரன்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியினர் ஹைதராபாத் வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறிப்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறும் பொழுது ” ஆமாம் அவர் இல்லாதது ஒரு பெரிய மிஸ். ஆனால் முதலில் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தனிநபரின் நலன்தான். அவருக்கு தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் நலம் அடைய வேண்டுகிறோம்.

டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம்தான் ஆனால் அதைவிட முக்கியம் உங்களுடைய குடும்பம். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வீடு திரும்பி இருக்கிறார், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.

இவருக்கு சரியான வீரரை அறிவிக்க வேண்டும். இதற்கு தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இந்தியாவில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஜோஸ் பகானன் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் சரியாக இருப்பார்கள். இவர்கள் நல்ல பேட்ஸ்மேன்கள்” என்று கூறியிருக்கிறார்.