உலக கிரிக்கெட்

ஒரே நாளில் 15 விக்கெட்.. தனியாளாக புரூப் அதிரடி சதம்.. இங்கிலாந்து அணி நியூசிக்கு எதிராக முன்னிலை

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் அதிரடி சதத்தாலும் சிறப்பான பந்துவீச்சாலும் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியில் விழுந்த இங்கிலாந்து அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி 23 பந்தில் 17 இரண்டு எடுக்க, இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கேட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 16, நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2, கிறிஸ் வோக்ஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது. இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் ஒல்லி போப் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்டது.

- Advertisement -

தனியாளாக போராடிய ஹாரி புரூக்

இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் 78 பந்தில் அதிரடியாக 66 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஒரு மனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் 91 பந்தில் அதிரடி சதம் அடித்து, 115 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 280 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நாதன் ஸ்மித் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 269 ரன்.. தென் ஆப்பிரிகாவை காத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்.. பவுமா மாஸ்.. இலங்கை அணி பின்னைடைவு

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருக்கிறது. பிரைடன் கார்ஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். தற்போது இங்கிலாந்து அணி நல்ல முன்னிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருக்கிறது

- Advertisement -
Published by

Recent Posts