சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வலிமையான நிலையில் முதல் இன்னிங்ஸில் இருக்கிறது.
தற்போது இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தடுமாறிய தென் ஆப்பிரிக்கா
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து கடந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய சதம் அடித்த ஸ்டப்ஸ் 4 ரங்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்த தென் ஆப்பிரிக்க அணி. ஒரு சிறிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அணியை காத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்
இதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கல்ட்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான முறையில் விளையாடி 224 பந்துகளில் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டெம்பா பவுமா 109 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 2 விக்கெட் 12 ரன்.. திரில் போட்டி.. பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி.. அட்டகாச ஆறுதல் வெற்றி
இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டன் சதம் அடித்து 250 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து வெளியேறினார். நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருக்கிறது. பந்துவீச்சுக்கு சாதகமான நிலையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பான நிலையில் இருப்பதால் இந்த போட்டியிலும் அந்த அணியின் கையே ஓங்கி இருக்கிறது.






