3வது டெஸ்ட்.. ரிஷப் பண்ட் செய்த நம்ப முடியாத காரியம்.. இங்கிலாந்து ரசிகர்கள் வரை பாராட்டு

0
70
Rishabh

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த காரியம் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரிய பாராட்டை பெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் காயம்

இந்த நிலையில் நேற்று இந்திய அணி முதல் நாளில் மூன்று விக்கெட்டுகளை இழந்து அதே சமயத்தில் சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக வலுவான முன்னிலையில் இருந்தது. இதனலையில் துரதிஷ்டவசமாக ரிஷப் பண்ட் கால் பாதத்தில் கடுமையாக காயம் அடைந்தார்.

இந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கால் பாதத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு குறைந்தது 6 வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்கள். இதன் காரணமாக ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என அதிகாரப்பூர்வமாக செய்திகள் வர ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிர்பாராத சம்பவம்

இப்படியான நிலையில் இன்று தொடர்ந்து இந்திய அணி விளையாடுகையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் ஆட்டம் இழந்தார்கள். முதலில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்ததும் வாஷிங்டன் சுந்தர் அனுப்பப்பட்டார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் இனி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியானது.

இப்படியான நிலையில் ரிஷப் பண்ட் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சர்துல் தாக்கூர் ஆட்டம் இழந்ததும் பேட்டிங் செய்வதற்கு களத்திற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக அவரால் வழக்கம் போல் நடக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் ரன்களுக்காக விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடியது மைதானத்தில் இருந்த ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இதையும் படிங்க : கருண் நாயருக்கு கம்பீர் செய்தது நியாயமே கிடையாது.. இதுவரை இல்லாததை பண்ணிட்டாங்க – அஸ்வின் விமர்சனம்

நேற்று 37 ரன் உடன் சென்ற ரிஷப் பண்ட் இன்று கூடுதலாக மேலும் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது ரிஷப் பண்ட் காயமடைந்திருந்த போதும் விளையாட வந்திருப்பது மைதானம் தாண்டி உலகம் எங்கும் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -