கோலியை தவிர வேறு எவராலும் செய்திருக்க முடியாது.. பாக். வீரர் ஹரிஸ் ரவுப் பாராட்டு

0
1900

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹரிஷ் ரவுப் விராட் கோலி பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கடந்த முறை அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.இந்த போட்டியில் விராட் கோலி கடைசி வரை பேட்டிங் செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் .

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றியை நோக்கி சென்ற நிலையில் விராட் கோலி ஹரிஷ் ரவுப் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை தலை கீழே மாற்றினார்  இதன் மூலம் ஹரிஷ் ரவுப்  வீசிய 19வது ஓவரில் சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இது குறித்து தனது மௌனத்தை கலைத்த ஹரிஸ் ரவுப், கோலியை தவிர வேறு யாராலும் என்னுடைய பந்துவீச்சில் சிக்சர் அடித்து இருக்க முடியாது. விராட் கோலியின் திறமையை தான் அது காட்டுகிறது. அந்த ஒவரில் தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியாவோ சிக்சர் அடித்திருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன்.

ஆனால் அது விராட் கோலி நிச்சயமாக அவர் அந்த சாட்டை ஆடுவார் என்று எனக்கு தெரியாது. கடைசி ஓவரை நவாஸ் தான் வீசப் போகிறார் என்று எனக்கு முன்பே தெரியும். அதனால் 20 ரன்னுக்கு மேல் வெற்றி இலக்கு இருந்தால் நிச்சயமாக அவர் கட்டுப்படுத்தி விடுவார் என்று எங்களுக்கு தெரியும். இதனால்தான் 19வது ஒவரில் முதல் நான்கு பந்துகளை வேகம் குறைத்து வீசினேன். அதில் மொத்தமாகவே நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் தான் அடிக்கப்பட்டது.

எட்டு பந்தில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது . மெல்போர்ன் மைதானத்தில் பவுண்டரிகள் தூரமாக இருக்கும். இதனால் நான் பந்தின் வேகத்தை குறைத்து வீசினேன். ஆனால் அவர் இப்படி ஒரு ஷாட் ஆடி சிக்சர் அடிப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. விராட் கோலிக்காக நான் அமைத்த பிளான் சரிதான்.ஆனால் அவருடைய திறமை சொக்கு நூறாக உடைத்தது.