டி20-களுக்கு இனி நிரந்தர கேப்டன் ஹர்திக் பண்டியா தானா? – 2024க்கு இப்போதே திட்டங்கள் சொல்கிறார்!

0
3296

2024 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இப்போது இருந்து திட்டங்களை கூறி வருகிறார் ஹர்திக் பாண்டியா. இதனால் இனிமேல் அவர்தான் டி20 களுக்கு கேப்டனா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறிவிட்டது. இந்திய அணிக்கு தொடர் முழுவதும் சரியான துவக்கம் கிடைக்கவில்லை.

- Advertisement -

ரோகித் சர்மா வெறும் 116 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார் கே எல் ராகுல் 150 க்கும் குறைவான ரன்களே அளித்திருந்தார். தொடர்ச்சியாக சொதப்பலான துவக்கங்கள் கொடுத்ததால் இந்திய அணையால் சரிவர செயல்பட முடியாமல் இந்த உலக கோப்பை முழுவதும் திணறியது.

டி20 உலக கோப்பை முடிவுற்றவுடன் இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று இருக்கிறது. இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 போட்டிகளின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்று விளையாடுகிறார். ஒருநாள் போட்டிகளுக்கு சிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இனி எப்போதும் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்று பேசப்பட்டு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா பேசிய விதமும் அது போல தான் இருந்தது. 2024 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இப்போது இருந்தே திட்டங்கள் செய்து வருவதாக அவர் பேட்டியளித்தார்.

- Advertisement -

“நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி போட்டியோடு வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் மிகப்பெரிய அணி தவறில் இருந்து கற்றுக்கொண்டு சரி செய்ய முயற்சிக்கும். அதைத்தான் நாங்களும் செய்ய உள்ளோம்.

2024 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இப்போது இருந்தே வழிவகுக்க வேண்டும். பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுத்து, யார் சரியாக இருப்பார்? என்பதை பற்றி ஆலோசித்து அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். இளம் வீரர்கள் தான் இந்த பார்மட்டிற்கு சரியாக இருப்பார்கள்.

2023 ஆம் ஆண்டு உலககோப்பை அடுத்த நோக்கில் இருக்கிறது. அதற்காக முதலில் செயல்பட வேண்டும். அதன் பிறகு அடுத்த டி20 உலக கோப்பைக்கான திட்டங்கள் பல இருக்கின்றன. அதை செயல்படுத்த வேண்டும். அணியில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்பவர்களாக இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும். அப்படிபட்ட வீரர்கள் கொண்ட அணிகள் தான் உலககோப்பை தொடரில் நன்றாக செயல்பட்டு வருகிறது. இதைப் பற்றியும் ஆலோசனை செய்து வருகிறோம்.” என்றார்.