“இது சரிப்பட்டு வராதுங்க.. முடிவு கண்டுபிடிச்சே ஆகனும்” – தோல்விக்குப் பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

0
9689
Hardikpandya

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்று, தொடரில் 0-2 என பின்தங்கி இருக்கிறது!

இன்றைய போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த இந்திய அணிக்கு கில் மற்றும் இசான் கிசான் இருவரும் சரியான துவக்கத்தை தரவில்லை. இஷான் கிஷான் 27 ரன்கள் எடுத்திருந்தாலுமே, அந்த ரன்கள் அணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அவர் தேவையில்லாமல் சூரியகுமார் யாதவையும் ரன் அவுட் ஆக்கிவிட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்ததில் இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவர் அணிக்கு அதிகபட்சமாக 41 பந்தில் 51 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் இழந்த போதும். நான்காவது வீரராக வந்த நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் அதிரடியாக விளையாடிய 67 ரன்கள் எடுக்க, இடையில் வெஸ்ட் இண்டிஸ் படபடவென்று விக்கட்டுகளை இழந்தாலும், சுதாரித்து மீண்டு வந்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் தோல்விக்கு பின்னால் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “எங்களுடைய பேட்டிங் செயல்திறன் சுத்தமாக மகிழ்ச்சி அளிக்கவில்லை. விக்கட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருந்தது. ஆடுகளம் மீண்டும் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக எங்களுக்கு தேவையான 160 ரன்களை எடுக்க முடியவில்லை.

- Advertisement -

பூரன் பேட்டிங் செய்த விதத்தில் என்னால் சுழற் பந்துவீச்சாளர்களை ரொட்டேஷன் செய்ய முடியவில்லை. இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கட்டுகள் வீழ்ந்து இருந்த நிலையில், பூரான் பேட்டிங் செய்த விதம் மிகவும் அபாரமாக இருந்தது.

தற்போது எங்களுடைய அணியில் ஏழு பேர்கள் நான்கு பந்துவீச்சாளர்கள் என்று நாங்கள் செல்கிறோம். பந்துவீச்சாளர்கள் நிறைய இருக்கும் பொழுது அவர்கள் ஆட்டத்தை வென்று கொடுப்பார்கள். நம்பர் 8, 9, 10ல் பேட்டிங் வசதியை எப்படி பெறுவது என்று நாம் கண்டுபிடித்து ஆக வேண்டும். பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

திலக் வர்மா பேட்டிங் செய்யும் விதம், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. நான்காவது இடத்தில் ஒரு இடது கை ஆட்டக்காரர் கிடைத்திருப்பதால், தொடர்ந்து ரைட் லெப்ட் காம்பினேஷன் மெயின்டன் செய்ய முடிகிறது. இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும் அச்சமின்றி வருகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!