பும்ராவை வைத்து பிசிசிஐ போடும் புதிய திட்டம்.. கம்பீருக்கு புதிய நெருக்கடி.. சரி வருமா?

0
462
Bumrah

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர வந்ததிலிருந்து வீரர்களை கையாள்வதில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இந்த நிலையில் வைத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் ஒரு பரிசோதனை முயற்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்குகிறது என்று தெரிகிறது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு கேட்ட பொழுதும் புதிய பயிற்சியாளர் கம்பீர் அவர்களை வற்புறுத்தி இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அழைத்து வந்தார். மேலும் அந்தத் தொடரை இந்திய அணி தோற்றது.

- Advertisement -

இந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தேர்வில் சில குழப்ப நிலைகளும் காணப்பட்டது. சூரியகுமார் யாதவை ஒரு நாள் கிரிக்கெட் அணியில் மீண்டும் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் சூரியகுமார் யாதவை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு விரும்பவில்லை.

இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் சூரியகுமார் யாதவ் நிச்சயம் இந்திய ஒரு நாள் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என கூறி வருகிறார்கள். மேலும் கம்பீர் வீரர்கள் முழு உடல் தகுதி உடனும் பார்மிலும் இருந்தால் இந்திய அணிக்காக எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கூறி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய தேர்வுக்குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் பும்ராவுக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்க நினைக்கிறது என்று கூறப்படுகிறது. அவருக்கு ஒரு நீண்ட ஓய்வு எனவும், அவரைப் போன்ற அரிதான வீரரை பாதுகாக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள்.

இந்திய அணி செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து ஜனவரி மாதம் வரையில் மொத்தம் 111 நாட்களில் 10 டெஸ்ட் போட்டிகள் விளையாட இருக்கிறது. மேலும் இதற்கு நடுவில் வெள்ளைப் பந்து தொடர்களும் சிலது இருக்கின்றன.இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் இது ஒழிய வேண்டும்.. நீங்க 3 பேரும் முன்ன என்ன பெருசா செஞ்சிங்க? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

எல்லா வீரர்களும் விளையாட வேண்டும் என்று புதிய பயிற்சியாளர் கம்பீர் விரும்புகிறார். எனவே இந்த முடிவு அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூற முடியாது. எனவே மேற்கொண்டு இந்த விஷயம் எப்படி போய் முடிகிறது என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -