“இப்ப ஆமை வேகத்துலதான் போகுது முயல் மாதிரி இல்ல” – தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா வேதனை!

0
1015
Hardikpandya

இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வென்று, தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது!

இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று இரண்டாவது போட்டியில் மோதியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியின் ஆடுகளம் போலவே இந்த போட்டியின் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில் துவக்க வீரராக வந்த இஷான் கிஷான் அரை சதம் அடிக்க, மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 34 ரன்கள் எடுக்க, இந்த துவக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது. இவர்களைத் தவிர இந்தியா அணியில் வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முடிவில் இந்திய அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோமரியோ செப்பர்டு மற்றும் மோட்டி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. ஆனாலும் அதற்கு அடுத்து வந்த சர்துல் தாக்கூர் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து தர, இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்தது. ஆனாலும் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் இளம் வீரர் கர்டி இருவரும் மிகப் பொறுப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் பந்து வீசும் பொழுது சுழற் பந்துவீச்சு மிக நன்றாக ஈடுபட்டது, மேலும் வெஸ்ட் இண்டீஸ் வேகபந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் தாக்குதல் மூலம் இந்திய பேட்ஸ்மன்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு எதையும் களத்தில் வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு நன்றாக பேட்டிங் செய்வதற்கு மாறிவிட்டது. ஏமாற்றம்தான் ஆனால் நாங்கள் இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்த விதம் குறிப்பாக இசான் கிசான் பேட்டிங் செய்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. இது தற்போதைய இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. சர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை எடுத்து எங்களை ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.

உலகக்கோப்பைக்கு தயாராக நான் அதிக ஓவர்கள் வீச வேண்டும். என்னுடைய பணிச்சுமையை நான் அதிகரித்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது எல்லாம் ஆமை போல்தான் இருக்கிறது முயல் போல கிடையாது. இதுவெல்லாம் உலகக் கோப்பையில் சரியாகும் என்று நான் நினைக்கிறேன்.

இப்போது தொடர் 1-1 என சமனில் முடிந்திருக்கிறது. இதனால் நாங்கள் நிறைய சோதிக்கப்படுவோம். அடுத்த ஆட்டம் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!