உலக கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.. மாற்று வீரர் உடனடியாக அறிவிப்பு!

0
2533
Hardik

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றின் ஒன்பது போட்டிகளில் முதல் 7 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளையும் இந்திய அணி வென்றிருக்கிறது.

இதன் மூலம் அதிரடியாக முதல் அணியாக நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்த விஷயம் வேகம் மற்றும் சுழல் என இரண்டுக்கும் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா என இருவர் இருந்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா பந்துவீசி நேராக வந்த பந்தை தடுக்க முயன்று காலில் காயமடைந்து பந்து வீச முடியாமல் வெளியேறினார்.

இதற்குப் பிறகு அவருடைய கணுக்கால் தசைநார் கிழிந்து இருப்பதாக சொல்லப்பட்டது. நாட் அவுட் சுற்றுக்கு அவர் வந்துவிடுவார் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக லீக் சுற்றின் இந்தியாவின் கடைசிப் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வந்து விடுவார் என்று சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து ரூல்ட் அவுட் செய்யப்பட்டுள்ளார் என்கின்ற தகவல் வந்திருக்கிறது.

மாற்றுவீரரே இல்லாத ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரை விட்டு விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆறாவது பந்துவீச்சாளராக நாக் அவுட் போட்டிக்கு யாரையும் நம்பி இருக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டு இருக்கிறார். விளையாடும் வேகப்பந்துவீச்சாளர்களில் யாராவது காயம் அடையும் பொழுது மாற்று வீரராக அவர் வருவார்.

உள்நாட்டில் உலகக் கோப்பையை வெல்வதே தன்னுடைய லட்சியம் என்றும், அதற்காகவே கடுமையாக உழைத்து மீண்டு வந்ததாகவும் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். தற்பொழுது அவர் மேற்கொண்டு விளையாட முடியாமல் போனது தனிப்பட்ட முறையில் அவருக்கே பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது!