2023 உலகக் கோப்பை முடிந்ததும் ஹர்திக் பாண்டியாதான் கேப்டன் – காரணங்களோடு அடித்துச் சொல்லும் கவாஸ்கர்!

0
152
Gavaskar

இந்திய அணி தற்பொழுது வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டன் என்கின்ற நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது!

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியதை அடுத்து, இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் அணி புதிதாக உருவாக்கப்பட்டு, அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ்போன்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

மேலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்ந்தாலும் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கேஎல்.ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தற்பொழுது இந்தியாவில் நடத்தப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில். அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மும்பையில் ஆரம்பிக்க உள்ளது. இந்த முதல் போட்டியில் குடும்ப விஷயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்து பேசி உள்ள கவாஸ்கர் ” ஹர்திக் பாண்டியா கேப்டனாக மொத்த அணிக்கும் ஒரு கம்பர்ட்டை தருகிறார். அவர் வீரர்களை கையாளும் விதமும், அவர் வீரர்களை அரவணைக்கும் விதமும், வீரர்களை கம்பர்ட்டாக வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இப்படி வீரர்களுக்கு கம்பர்ட்டை தருவதுதான் வீரர்களிடமிருந்து அவர்களது இயற்கையான இயல்பான ஆட்டத்தை வெளியில் கொண்டு வர உதவும்!” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசி உள்ள அவர்
” ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அணிக்கு எப்பொழுது நல்ல மொமெண்ட்டம் தேவை என்று தெரிந்து, தன்னை முன்னே களமிறக்கிக் கொண்டார். அவர் தன்னை சாதாரணமாக முன்னே களமிறக்கிக் கொள்ள வேண்டும் என்று இதை செய்யவில்லை என்று வீரர்களுக்கு புரிந்தது. அவர் ஒரு பயரை ஆட்டத்தில் கொண்டுவரவே இதைச் செய்தார், நம்மிடமும் அவர் இதையே எதிர் பார்க்கிறார் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதுதான் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் முக்கியமான அம்சம்” என்று கூறியிருக்கிறார்!

தொடர்ந்து பேசிய அவர் ” அவர் ஒரு ஈர்க்கக்கூடிய கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் இந்திய டி20 அணிக்கு அவரது கேப்டன்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மும்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் வெற்றி பெறும் பொழுது, 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பைக்குப் பிறகு அவரை கேப்டனாக முத்திரை குத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார்!