என் விருப்பம் முக்கியமல்ல.. கம்பீர் சூர்யா விருப்பம்தான் முக்கியம்.. எனக்கு மனசு இருக்கு – ஹர்திக் பாண்டியா பேச்சு

0
235
Hardik

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்தப் போட்டி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆறாவது இடத்தில் பேட்டிங் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக 28 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடியால் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய தென் ஆப்பிரிக்கா 74 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 101 வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

டைமிங்தான் முக்கியம்

இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “நான் என்னுடைய ஷாட்களை நம்ப வேண்டி இருந்தது. விக்கெட் கொஞ்சம் ஸ்பைசியாக இருப்பதை உணர்ந்தேன். எனவே இங்க பந்தை பலமாக அடிப்பதை விட டைமிங் செய்ய வேண்டியது முக்கியமாக இருந்தது. எனவே நான் பேட்டிங் செய்த விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்”

“கடந்த ஆறு ஏழு மாதங்களில் உடல் தகுதியில் நான் மிகவும் சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறேன். காயத்திற்குப் பிறகு இந்த 50 நாளில் நமக்கு பிரியமானவர்களை பிரிந்து என்சிஏ வில் இருந்தது, திருப்பி இப்படியான ஒரு பலனை தரும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இதற்காகத்தான் மிகவும் கடினமாக உழைக்கிறோம்”

- Advertisement -

இந்தியாவின் விருப்பமே முக்கியம்

“இன்று நான் பவர் பிளேவில் பந்து வீசவில்லை. நான் மாதிரி ரோல்களில் செயல்படுகிறேன் என்பது குறித்து பெரிதாக நான் எதையும் நினைப்பதில்லை. இங்கு ஹர்திக் பாண்டியாவின் விருப்பம் என்ன என்பதை விட இந்தியாவின் விருப்பம் என்ன என்பதுதான் முக்கியம். எனக்கு எப்போதும் அந்த மனநிலை இருக்கிறது. நான் எப்பொழுதும் அணியையே முதன்மையாக நினைக்கிறேன்”

இதையும் படிங்க : எங்கள இந்தியா பரிதாபம் பண்ணிடுச்சு.. நாங்க தோத்ததுக்கு முக்கிய காரணம் இதுதான் – மார்க்ரம் பேட்டி

“கேசவ் மகாராஜ் பந்து வீச்சில் அக்சர் படையலுக்கு நெருங்க மாட்டார் என்று எனக்கு தெரியும். எனவே அவர் என்னுடைய வளையத்தில் பந்து வீசினால், நான் அதை அடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அங்கு இரண்டு சிக்ஸர் கிடைத்தது எங்களுக்கு ஆட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல உதவியது. இது விளையாட்டுத் திறன் மற்றும் எந்த பந்துவீச்சாளரை எடுப்பது என்பதைப் பற்றியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -