நேற்று ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியிலும் மும்பை முதலில் பேட்டிங் செய்யும்பொழுது சுமாரான நிலையிலேயே இருந்தது. திலக் வர்மா 22 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நேரத்தில் இடைவேளையின் போது ஹர்திக் பாண்டியா அவரிடம் ஏதோ கத்தி கத்தி பேசிக் கொண்டு இருந்தார். இதற்குப் பிறகு திலக் வர்மா 23 பந்துகளை சந்தித்து 81 ரன்கள் குவித்து சதமும் அடித்தார்.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசி உள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா “உண்மையில் நீங்கள் வெளியில் சென்று வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். அதே சமயத்தில் எங்களுக்கு இந்த அகமதாபாத் மைதானம் மிகப்பெரிய கடினமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சூழலில் இந்த மைதானத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது”
“இந்த போட்டியில் இளம் வீரர்கள் உள்ளே வந்து மிக அற்புதமான செயல் திறனை வெளிப்படுத்தினார்கள். கிரீஷ் சரியான இடங்களில் வந்து பந்து வீசினார். அஸ்வனி குமார் விக்கெட்டுகளை கைப்பற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது”
“14ஆவது ஓவர் டைம் அவுட் போது நான் நினைத்தது என்னவென்றால் திலக் வர்மா போன்ற ஒரு திறமை மிக்க வீரர் கவலைப்பட வேண்டியதில்லை. நான் அவரிடம் தொடர்ந்து சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், பந்தை சரியாக பார்த்து எப்படி இருந்தாலும் அடிக்க வேண்டும் என்பதுதான். அவரது பேட்டிங் திறமை உண்மையிலேயே மிகவும் அற்புதமானது. அவர் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க சரியான நேரம் இதுதான்”
இதையும் படிங்க : 23 பந்தில் திலக் வர்மா எடுத்த விஸ்வரூபம்.. தப்பித்த ஹர்திக் பாண்டியா.. குஜராத் சாதனை தோல்வி – ஐபிஎல் 2026
“சில நேரங்களில் நான் மிகச் சத்தமாக கூட கத்தினேன். இதனால் எனக்கு மயக்கம் கூட வந்தது. ஆனால் அது அனைத்து மிகவும் முக்கியமானது. திலக் வர்மாவுக்கு அது தேவையானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கே அது முக்கியமானது. கேப்டனாக இருக்கும் போது இப்படிப்பட்ட ஆற்றல் அணியின் நிலைமையை மாற்றும் என்று கூறியிருக்கிறார்”