23 பந்தில் திலக் வர்மா எடுத்த விஸ்வரூபம்.. தப்பித்த ஹர்திக் பாண்டியா.. குஜராத் சாதனை தோல்வி – ஐபிஎல் 2026

0
9
MI

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை 99 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மும்பையின் திலக் வர்மா அதிரடி சதம் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தீபக் சகர் மற்றும் சர்துல் தாகூர் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

- Advertisement -

விஸ்வரூபம் எடுத்த திலக்

இந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் யூனிட் மிகவும் சுமாராகவே ஆரம்பித்தது. குயிண்டன் டி காக் 11 பந்தில் 13 ரன், சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 15 ரன், டேனிஸ் மலேவர் 5 பந்தில் 2 ரன், அதிரடி காட்டிய நமன் திர் 32 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு முனையில் திலக் வருமா தனது முதல் 22 பந்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதற்கு அடுத்து விஸ்வரூபம் எடுத்த அவர் அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். மொத்தமாக ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 101 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா பொறுமையாக ஆடி 26 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ரபடா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

குஜராத் சாதனை தோல்வி

இதைத்தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லோரும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இறுதியாக குஜராத் அணி 15.5 ஓவரில் 100 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : தோனியை சுற்றி முகஸ்துதி பாடும் கூட்டம் இருக்கு.. சிஎஸ்கே வர மோசமான ஹேண்டில் பண்ணி இருக்கு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு தனிப்பட்ட முறையில் இது பெரிய ரன் வித்தியாச தோல்வியாக அமைந்தது. மேலும் இந்த போட்டியிலும் இறுதி கட்டத்தில் வந்து 16 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா அதிரடியாலும் மும்பை பவுலர்களாலும் கிடைத்த வெற்றியால் தற்போது தப்பித்திருக்கிறார்.

- Advertisement -