நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் ஒரு கட்டத்தில் 220 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. கடைசியில் சுமாராக விளையாடிய 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை வெறும் 17 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
பொதுவாகவே சூரியகுமார் யாதவ் பவர் பிளேவில் கொஞ்சம் தடுமாற்றம் கொண்டவர். அதே சமயத்தில் பவர் பிளேவுக்கு வெளியே ஸ்பின்னர்களை அருமையாக விளையாடுவார். இந்த நிலையில் முதல் ஓவரில் விக்கெட் விழுந்ததும் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் அனுப்பப்பட்டார். இது முதல் தவறாக அமைந்தது
இதைத் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் ரூதர்போர்டு ஐந்தாவது இடத்தில் வந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா வந்து 12 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் அல்லாஹ் கசன்பர் மற்றும் பும்ரா இரண்டு சிறப்பான ஓவர்களை பவர் பிளேவில் வீசியபோது, அவர்களையே தொடராமல் உள்ளே வந்து ஹர்திக் பாண்டியா ரன்கள் கொடுத்தார். இதுவெல்லாம் நேற்றைய போட்டியில் தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது “நேர்மையாகச் சொன்னால் இப்போது எனக்கு சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை. நாம் ஆரம்பத்திற்கு திரும்பி சென்று எங்கே குறைபாடு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது தனிப்பட்ட வீரர்களாலா? இல்லை ஒட்டுமொத்த அணியாகவா? இல்லை திட்டத்தில் தவறு நடக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அதே சமயத்தில் பஞ்சாப் மிகச் சிறப்பாக விளையாடி தோற்கடித்தார்கள். அவர்களுக்கு அதற்கான பாராட்டுகள்”
இதையும் படிங்க : என் கேட்ச் மும்பையை மொத்தமா தடுத்துச்சு.. எங்களுக்கு ரன் தரவே விருப்பம் இல்ல சார் – ஸ்ரேயாஸ் பேட்டி
“இப்போது நாங்கள் யோசிக்க வேண்டியது, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமா? அல்லது இதே போல தொடர்ந்தால் நாம் திரும்பி வர முடியுமா? என்பதுதான். இந்த மாதிரியான கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். மேலும் பொறுப்பையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.