என் கேட்ச் மும்பையை மொத்தமா தடுத்துச்சு.. எங்களுக்கு ரன் தரவே விருப்பம் இல்ல சார் – ஸ்ரேயாஸ் பேட்டி

0
6
Shreyas

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்திருந்தார்.

- Advertisement -

நிலைத்த நம்பிக்கை இருக்கிறது

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் போது “நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை உடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். இதுவரை நாங்கள் விளையாடிய விதம் மிகவும் அபாரமானது. ஆனால் நாங்கள் நிலைத்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒரு போட்டியும் வீரர்களுக்கும் அணியாகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறோம். அதனால் இது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி”

“ப்ரப்சிம்ரன் மிகவும் அருமையான வீரர். கடந்த சீசன்களில் அவர் மிகவும் வெறித்தனமாக அடித்து விளையாடுவார். பவர் பிளேவில் பெரிய அளவில் ரன் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இப்போது அப்படியே மாறி போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக முதிர்ச்சி அடைந்து வருகிறார்”

- Advertisement -

அந்த கேட்ச்

“(நகைச்சுவையாக) என் கேட்ச் மும்பை ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது. உண்மையில் நாங்கள் போட்டியில் பந்துவீச்சில் திரும்பி வருவதில் சிறப்பாக மாறியிருக்கிறோம். ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் பவர் பிளேவில் ரன்கள் கொடுத்த பிறகு, அடுத்த ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை எப்படி குறைப்பது பேசி செய்தோம். மும்பை அணிக்கு எதிராகவும் நாங்கள் அதையே செய்தோம்”

இதையும் படிங்க : விராட் சாதனையை தொட்ட ஸ்ரேயாஸ் ஐயர்.. மும்பை அணியை புரட்டி எடுத்த பஞ்சாப்.. வான்கடேவில் மெகா வெற்றி

” நாங்கள் இதுவரையில் முதலில் பேட்டிங் செய்யவில்லை. தொடர்ந்து நான் டாஸ் வென்று வருவது அதிர்ஷ்டமான ஒரு விஷயம். ஆனாலும் நாங்கள் நல்ல பேட்டிங் வைத்திருக்கிறோம். எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவும் காத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -