இதுலாம் சாதாரணம் பாஸ்.. என்ன கொஞ்சம் விக்கெட் போய்ருச்சு.. ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
185

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கையில் இருந்த ஆட்டத்தை மொத்தமாக தாரை வார்த்தது இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பவல் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணிய 28 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடியாக ஆடி விரைந்து வெற்றிபெற வேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சூர்யகுமார் யாதவ் 21 ரன்களிலும், திலக் வர்மா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

- Advertisement -

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா – சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக ஆடினாலும், ஒரே ஓவரில் இருவரும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து டெய்லண்டர்களும் விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பவர் பிளே ஓவர்கள் மோசமான ஆடியதே காரணமாக அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விக்கெட்டை போனாலும் கவலையின்றி, பேட்டை சுழற்றினர். இதனால் பவர் பிளேவில் நல்ல ஸ்கோரை வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டிப்பிடித்தது. ஆனால் இந்திய அணி சுப்மன் கில் ஆட்டமிழந்த உடனே பாதுகாப்பாக ஆட தொடங்கியது. அதேபோல் அர்ஷ்தீப் சிங் வீசிய ஒய்டு பந்துகளும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா, சேஸிங் போது ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் ஆங்காங்கே செய்த சில தவறுகள் தோல்விக்கு காரணமாக மாறிவிட்டது. இளைஞர்கள் நிரம்பிய அணிகள் என்பதால் தவறுகள் நடக்கும். ஆனால் தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, எங்கள் பொறுப்பை உணர்ந்து வளர்ச்சிடைவோம்.

- Advertisement -

ஆட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் எங்களின் கட்டுபாட்டில் இருந்தது எங்களுக்கான பாசிட்டிவ் அம்சம். டி20 கிரிக்கெட்டில் எந்த இலக்காக இருந்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தால், ஒன்றும் செய்ய முடியாது. அது இன்றைய நாளில் இந்திய அணிக்கு நடந்திருக்கிறது. ஒரே ஓவரில் நானும், சஞ்சு சாம்சனும் விக்கெட்டை பறிகொடுத்தது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம் ஆட்டம் மாறுவதற்கு காரணமாகிவிட்டது.

குல்தீப், சாஹல் மற்றும் அக்சர் படேல் என்று மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கியதற்கு ஆடுகளமே காரணமாகும். இரு விரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும் ஒன்றாக வாய்ப்பு வழங்க நினைத்தோம். அக்சர் படேலாக் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்பதால், அணிக்கு சரியாக பொருந்தி போகிறார். 3 பேரையும் ஆட வைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களை தொடர்ந்து டி20 தொடரிலும் முகேஷ் குமார் அறிமுகம் கண்டுவிட்டார். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எப்போதும் உழைப்பவர். இரு ஓவர்களை அடுத்தடுத்து வீசியது சிறப்பாக இருந்தது. திலக் வர்மா ஆட்டத்தை தொடங்கியதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது.

2 சிக்சர்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கியது அபாரமாக இருந்தது. மன உறுதியுடன், யாருக்கும் பயமில்லாமல் விளையாடுகிறார். இந்திய அணிக்காக முகேஷ் குமார் மற்றும் திலக் வர்மா இருவரும் பல்வேறு சாதனைகளை படைப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.