நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலக கோப்பையை வென்று வந்த இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவுக்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய வீரர்களை பாராட்டி விருந்தளித்து அவர்களுடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது ஹர்திக் பாண்டியா கடந்த ஆறு மாதங்களில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
கடந்த வாரம் சனிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை உயர்த்தியது. 17 வருடங்களுக்குப் பிறகு வென்ற டி20 உலகக்கோப்பையாகவும், 13 வருடங்கள் கழித்து வென்ற ஒரு உலகக் கோப்பையாகவும் இந்திய அணிக்கும் நாட்டிற்கும் அமைந்தது.
இந்த நிலையில் உடனே இந்திய வீரர்கள் நாடு திரும்பி தங்கள் வெற்றியை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் பார்படாசில் ஏற்பட்ட புயல் தடுத்தது. பிறகு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இந்திய வீரர்கள் நேராக டெல்லி வந்தார்கள். டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகக் கோப்பை வென்ற வீரர்களை வாழ்த்தி விருந்து கொடுத்தார்.
இந்த நிகழ்வில் இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த ஹர்திக் பாண்டியா தன்னுடைய வாழ்வில் கடந்த ஆறு மாதங்களாக தான் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன். அந்த அவமானங்களுக்கு எந்த வகையில் பதில் சொல்வது என்று தீர்மானித்தேன் என்பது குறித்து மன நெகிழ்வாக பேசியிருக்கிறார்.
இந்திய பிரதமர் உடனான உரையாடலில் ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது “கடந்த ஆறு மாதங்கள் எனக்கு நிறைய என்டர்டைன்மென்ட் ஆகவும், நிறைய ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. பொதுமக்கள் என்னைக் கொச்சைப்படுத்தினார்கள். என்னைச்சுற்றி நிறைய விஷயங்கள் மோசமாக நடந்தன.
இதையும் படிங்க : ரோகித்தா பும்ராவா?.. இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல யார் காரணம்? – கவாஸ்கர் தந்த தீர்ப்பு
இப்படியான நேரத்தில் நான் இந்த எல்லா விஷயத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றால், அது என்னுடைய விளையாட்டு மூலமாக தான் பதில் சொல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்தேன். அதற்காகநான் வலுவாக இருக்கவும், விளையாட்டு சிறப்பாக இருக்க கடினமாக உழைக்கவும் என்னை தயார்படுத்தினேன். இதுவே என்னை கொச்சைப்படுத்தியவர்களுக்கு போதுமான பதில் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.