ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு உறுதி மொழி என்ன தெரியுமா?

0
56

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த தொடர் மூலம் சொந்த மண்ணில் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிடம் என்ன உறுதிமொழி எடுத்துள்ளார் என்பது குறித்து செய்தியாளர்கள் நேற்று அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா நான் இன்னும் பெரிய சாதனைகளை எதையும் செய்யவில்லை. அதனால் 2023 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது புத்தாண்டு உறுதி மொழியாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்திய அணிக்காக என்னால் முடிந்த வரை கடுமையாக உழைத்து வெற்றி பெற முயற்சி செய்வேன். தற்போது  இந்திய அணிக்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது .

2022 ஆம் ஆண்டு எனக்கு அதிசயங்கள் நிறைந்ததாக இருந்தது. ஐபிஎல் சாம்பியன் பட்டம், இந்திய டி20 அணியின் கேப்டன் என பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்தது. இனிவரும் நாட்களில் நிறைய சாதிக்க காத்திருக்கிறோம். தொடர்ந்து பல்வேறு ஐசிசி தொடர்கள் நடைபெற உள்ளது. இதனால்  ஐசிசி கோப்பையில் வெல்ல நாங்கள் முயற்சி செய்வோம்.

ஆசிய கோப்பையில் அணிந்த தோல்விக்கு பழித்திருப்பீர்களா என்று செய்தியாளர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்டனர். அதுக்கு பதில் அளித்த அவர் நாங்கள்
பழித்தீர்க்க கிரிக்கெட் விளையாட வில்லை. எப்போதும் போல் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பதில் அளித்தார். ஆனால் இந்தியாவில் விளையாடுகிறோம் என்ற நெருக்கடியை இலங்கை அணிக்கு நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று ஹர்திக் பாண்டியா எச்சரிக்கை விடுத்தார். இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இளம் வீரர் சிவம் மவிக்கு வாய்ப்பு கொடுப்பாரா இல்லை உம்ரான் மாலிக்கை வைத்து விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.