அடித்தது ஒரு சிக்ஸ்.. ஆனா முடிச்சதோ தோனியின் பல வருட ரெக்கார்டை!! ஹர்திக் பாண்டியாவின் புதிய சாதனை!

0
95

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்கள் அடித்திருந்தது. கடந்த முறை இந்த இரு அணிகளும் டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாடின. உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

அதற்கு பழி தீர்க்கும் விதமாக இப்போட்டியை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டு, முதலில் இந்தியா பந்துவீச்சில் அசத்தியது. பின்னர் 148 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், முன்னாள் கேப்டன் விராத் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் தலா 35 ரன்கள் அடித்து சரிவிலிருந்து மீட்டனர். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்த ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அபரமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இப்போட்டியில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்திருந்தார். ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி வழக்கமாக ஐந்தாவது அல்லது அதற்கு கீழ் வரிசையில் பேட்டிங் இறங்கக் கூடியவர். டி20 போட்டிகளில் 5வது அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இதற்கு முன்னர் 38 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது 39 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் ஐந்தாவது அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்

1. ஹர்திக் பாண்டியா – 39 சிக்ஸர்கள்

2. மகேந்திர சிங் தோனி – 38 சிக்ஸர்கள்

3. யுவராஜ் சிங் – 26 சிக்ஸர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்திய அணி மற்றுமொரு சாதனையை படைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய டி20 போட்டிகளில் இந்திய அணி சேஸ் செய்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்திருக்கிறது. வேறு எந்த அணியும் டி20களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை இத்தனை முறை சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை. இதுவரை 5 முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி செஸ் செய்துள்ளது. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

டி20களில் பாகிஸ்தானுடன் இந்திய அணி சேஸ் செய்த போட்டிகள்:

2012 கொழும்பு – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

2014 டாக்கா – ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

3. 2016 டாக்கா – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

4. 2016 கொல்கத்தா -6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

5. 2022 துபாய் – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.