கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ; 30 பந்துகளில் 71 ரன்கள் – ஹர்திக் பாண்டியா அமர்க்கள ஆட்டம்!

0
111
Hardik

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மைதானத்தில் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அதிரடியாக இன்னிங்சை ஆரம்பித்தார்கள். ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும் நிலைக்கவில்லை அடுத்துவந்த விராட் கோலியும் நிலைக்கவில்லை.

இதற்குப் பின்பு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை மைதானத்தின் நாலா புறங்களிலும் சிதறடித்து மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை வேகமாக கொண்டு வந்தார்கள். இந்த ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 35 பந்துகளில் 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகளோடு கே எல் ராகுல் 55 எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளோடு 46 ரன்கள் குவித்தார்.

இதற்கு நடுவில் களம் புகுந்த ஹர்திக் பாண்டியா வேறு ஒரு ரூபத்தில் விளையாட ஆரம்பித்தார். பாதுகாப்பாகவும் விளையாடினார் ஆனால் அதிரடியாகவும் விளையாடினார். அவரது பேட்டில் இருந்து தேவைக்கு தகுந்தபடி ரன்கள் வந்து கொண்டே இருந்தது. இறுதிவரை களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா வெறும் 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடக்கம்.

- Advertisement -

கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் இணைந்து எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் சிங்கிளுக்கு ஓடாமல், அடுத்த பந்தில் 2 ரன்கள், அதற்கடுத்த மூன்று பந்துகளில் வரிசையாக சிக்சர்கள் என விளாசித் தள்ளினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.

ஹர்திக் பாண்டியாவின் இந்த பாதுகாப்பான மற்றும் ஆட்டத்தை நிறைவு செய்யும் பொறுப்பான ஆட்டம் முறை இந்திய அணிக்கு வரவிருக்கின்ற டி20 உலக கோப்பையில் மிகப்பெரிய நல்ல விஷயமாக இருக்கும். ஹர்திக் பாண்டியா பினிஷிங் ரோலில் கலக்குவதால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக வேறு யாரையும் ஆட வைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -