ரிஷப் பண்ட் நல்லா அங்க நடிச்சாரு.. அதான் என் டீமுக்கு வாங்கினேன் – லக்னோ ஓனர் வித்தியாச கருத்து

0
189
Goenka

நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் வரலாறு காணாத விலைக்கு ரிஷப் பண்ட்டை தன் அணிக்கு வாங்கியது ஏன் என லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியிருக்கிறார்.

2024 ஐ பி எல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ரிஷப் பண்ட்டை வாங்கியது. இதுவரையிலான ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு விலையை கொடுத்து அவரை வாங்கியதற்கு வித்தியாசமான காரணத்தை லக்னோ அணியின் உரிமையாளர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலத்தை சுவாரசியமாக்கிய ரிஷப் பண்ட்

இந்த முறை மெகா ஏலமாக இருந்த பொழுதும் கூட பல வீரர்களை தக்க வைக்க வசதியாக விதிகள் கொண்டுவரப்பட்டதால், முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வராமல் போனார்கள். இதன் காரணமாக ஐபிஎல் மெகா ஏலம் மினி ஏலத்திற்கு சமமான சுவாரசியத்தில் கூட இல்லை.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்தார். இதன் காரணமாகவே ஏலத்தில் கொஞ்சம் சுவாரசியம் இருந்தது. ஒருவேளை ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வராமல் இருந்திருந்தால், இந்த சுவாரசியமும் மெகா ஏலத்தில் இல்லாமல் போயிருக்கும்.

- Advertisement -

நடித்தது பிடித்தது வாங்கினேன்

இதுகுறித்து லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறும் பொழுது ” 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது ரிஷப் பண்ட் காயம் ஏற்பட்டதாக கூறி நடித்தது எனக்கு பிடித்திருந்தது. இதனால் ஆட்டத்தின் வேகம் தடைப்பட்டது. அதற்குப் பிறகு எல்லாம் அந்த அணிக்கு எதிராக மாறியது. அப்பொழுதே அவர் என் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என நான் யோசித்தேன். இதுதான் அவரை வாங்க முக்கிய காரணம்”

இதையும் படிங்க : பும்ரா கேப்டனா இருக்க தகுதியான ஆளு.. அதுக்கு முக்கியமா இந்த வேலையை செய்யறாரு – புஜாரா கருத்து

“மேலும் அவர் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அது என்னை மிகவும் கவர்ந்தது. அவர் சாலை விபத்தில் சிக்குவதற்கு முன்பு இருந்ததை விட மிகவும் சிறப்பான முறையில் ஃபார்முக்கு வந்திருக்கிறார். அவருடைய மீண்டு வரும் திறன் மற்றும் எழுச்சி லக்னோ அணிக்கு என்னை அவரை வாங்க தூண்டியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -