ஐபிஎல் 2025

நானே சொல்றேன்.. சேப்பாக்கத்தில் நடக்கிறது வான்கடேவுல நடக்காது.. தோனி இழுத்திடுவார் – ஹர்திக் பாண்டியா பேச்சு

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பற்றி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று இருக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 2 போட்டிகளை வென்று இருக்கிறது. எனவே இந்த போட்டி பிளே ஆப் சுற்றில் தொடர்ந்து இருப்பதற்கு இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

ஹர்திக் பாண்டியா வளர்ச்சியில் தோனி

ஹர்திக் பாண்டியாவை முதன் முதலில் கண்டறிந்து அறிமுகப்படுத்திய பெருமையும் வளர்த்த பெருமையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமே இருக்கிறது. பரோடாவில் இருந்து அவரையும் அவரது அண்ணனையும் கண்டறிந்து மும்பை இந்தியன்ஸ் கொண்டு வந்து ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியது.

இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரின் தேவை புரிந்து ஹர்திக் பாண்டியா அவரது போக்கில் கற்றுக் கொள்வதற்கு தோனி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். அவராகவே தவறுகள் செய்து கற்றுக் கொள்வதற்கான நேரத்தையும் சூழ்நிலைகளையும் தோனி உருவாக்கிக் கொடுத்தது ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் வளர்வதற்கு முக்கியமாக இருந்தது. இதை ஹர்திக் பாண்டியாவே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனி கவர்ந்து விடுவார்

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் விளையாடும் போது இருக்கும் சூழ்நிலையும், அதுவே வான்கடே மைதானத்தில் விளையாடும் பொழுது இருக்கும் சூழ்நிலையும் வெவ்வேறானதாக இருக்கும் என்று தோனியை வைத்து ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஜாண்டி ரோட்ஸ் பிலிப்ஸ் கிடையாது.. இந்த இந்தியர்தான் சிறந்த பீல்டர்.. காரணம் இதான் – நெக்ரா தேர்வு

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது ” நாங்கள் இரு அணிகளும் சென்னை சேப்பாக்கத்தில் மோதிக் கொள்ளும் பொழுது அங்கு முழுவதுமாக சிஎஸ்கே ரசிகர்கள்தான் இருப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை பார்ப்பது கடினம். அதே சமயத்தில் நாங்கள் இரு அணிகளும் வான்கடேவில் மோதிக்கொள்ளும் பொழுது இரண்டு அணிகளுக்கும் சமமான ஆதரவு இருக்கும். இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய அளவில் இருப்பார்கள். தோனி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையும் தன் பக்கமாக இழுத்து விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by