2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா டி20 ஃபார்மட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க அதற்கு பிறகு இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவரது தலைமையில் இந்திய அணி இரண்டு டி20 தொடரிலும் விளையாடி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான பிராட் ஹாக் இந்திய டி20 அணியின் சூரியகுமார் யாதவ் குறித்தும் ஹர்திக் பாண்டியா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையில் அரைஇறுதிப் போட்டியோடு வெளியேறிய போது இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக வெளியேற அதற்குப் பிறகு மீண்டும் ரோகித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அதற்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதற்குப் பிறகு இளைஞர்களுக்கு வழி விடும் வகையில் டி20 ஃபார்மெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் அவருக்கு பிறகு டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக சூரியகுமார் யாதவை இந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டனாக அறிவித்தது. இதனை ஹர்திக் பாண்டியா எவ்வாறு ஏற்றுக்கொண்டு இந்திய அணையில் தொடர்ந்து விளையாடுவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த வேளையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் முக்கிய நபராக மாறி இருக்கிறார்.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறும்போது “நான் ஹர்திக் பாண்டியாவின் வழியை விரும்புகிறேன். அவர் டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவை ஏற்றுக்கொண்டார். அவரது ஆட்டம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக உதவி இருக்கிறது. அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட ஆரம்பித்து இருக்கிறார். தனது உண்மையான பேட்டிங் வெளிப்பாட்டை காட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க:என் மருமகனையும் பாபரையும்.. எல்லாரையும் நீக்கினது கரெக்டான விஷயம்தான் – ஷாகித் அப்ரிடி ஓபன் பேச்சு
அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடப் போராடினார் ஆனால், அதன் காரணம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனென்றால் அவர் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய போது நிறைய அழுத்தம் அவர் மீது இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியில் தனது உண்மையான கிளாஸ் ஆட்டத்தை வெளியே காட்டி இருக்கிறார்” என்று பிராட் ஹாக் கூறியிருக்கிறார். எனவே ஒரு மூத்த வீரராக ஹர்திக் பாண்டியா இனி வரும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தருவார் என்று எதிர்பார்க்கலாம்.