ஜெயிச்சா மட்டும் பத்தாது தம்பி, இதையும் ஒழுங்கா பண்ணனும் – செய்ய தவறிய ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

0
389

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முதல் வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் மோதினர். இப்போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டுதடுமாறி 20 ஓவர் முடிவில் 8 விக்கெடுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே அடித்தது. மைதானம் பேட்டிங் செய்வதற்கு நன்கு சாதகமாக இருந்தது.

இதை பயன்படுத்திக் கொண்ட குஜராத் அணியின் துவக்க வீரர்கள் வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இந்த வேகத்தை பார்க்கையில், 15 ஓவர்களில் ஆட்டம் முடிந்து விடும் என்ற கணிப்பு நிலவியது.

பின்னர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக கட்டுப்படுத்தியதால் போட்டியில் 20ஆவது ஒருவர் வரை சென்று குஜராத் அணி தட்டுதடுமாறி வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்கள் வீசிமுடிக்கப்பட்டது. ஆனால் முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

ஐபிஎல் விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத பவுலிங் அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அல்லது போட்டி சம்பளத்திலிருந்து பாதி, இவற்றில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும் வார்னிங் கொடுக்கப்படும். லீக் போட்டிகளில் 3 வார்னிங் பெரும் அணியின் கேப்டன் ஓரிரு போட்டிகளுக்கு தடை செய்யப்பட்டுவர்.

இதன் அடிப்படையில், பஞ்சாப் அணிக்கெதிராக நடந்த போட்டியில் உரிய நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசிமுடிக்காத ஹார்திக் பாண்டியாவிற்கு வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் நிர்வாகம். அத்துடன் 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சீசனில் சஞ்சு சாம்சன், பாப் டூ ப்ளசிஸ் ஆகியோருக்கு தலா ஒருமுறை அபராதம் வார்னிங் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.