தோனி மாதிரி ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டிய அவசியமே கிடையாது – முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்!

0
181
Dhoni

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வருகிறது!

இதில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற முதல் மூன்று டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருந்து ஐந்து போட்டிகள் பொண்டாட்டி 20 தொடர் அமெரிக்காவுக்கு மாறியிருக்கிறது. இங்கு இன்றும் நாளையும் நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது.

இந்திய அணி வென்ற மூன்றாவது டி20 போட்டியின் போது 49 ரன்கள் எடுத்து இளம் வீரர் திலக் வர்மா தொடர்ச்சியான தனது இரண்டாவது அரை சதத்திற்கு நின்று இருந்தார். அப்பொழுது கேப்டன் ஹர்திக் பாண்டியா அதற்கு வாய்ப்பு தராமல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இது அப்போது பெரிய சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக நிறைய பதிவுகள் செய்தார்கள். அதே சமயத்தில் ஆதரவாகவும் சில வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இது ஒரு சுவாரசியமான விஷயம். இதற்காக ஹர்திக் நிறைய ட்ரோல் செய்யப்பட்டார் விமர்சிக்கப்பட்டார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தனிப்பட்ட மைல்கற்களுக்கு இடம் கிடையாது. எனவே இங்கு இதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என்கின்ற ஒரு விஷயம் நடுவில் இருக்கிறது.

ஒருமுறை மகேந்திர சிங் தோனி ஒரு தற்காப்பு ஆட்டத்தை விளையாடியது எனக்கு நினைவு இருக்கிறது. காரணம் எதிர் முனையில் விராட் கோலி இருந்தார். அவர்தான் அந்த ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று தோனி நினைத்தார். தன்னை லைம் லைட்டுக்கு கொண்டுவர அவர் விரும்பவில்லை. மகேந்திர சிங் தோனியை தனது முன்மாதிரியாக ஹர்திக் பாண்டியா கொண்டிருந்தாலும், எல்லா விஷயத்திலும் அவரை இவர் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். சர்வதேச அறிமுகத்தில் மூன்று போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்று இருக்கிறார். அவர் மூன்றாவது போட்டியில் அரை சதத்திற்கு மிகவும் அருகில் இருந்தார். அது அரை சதமாக மாறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பேட்டிங் செய்கையில் அவர் புத்திசாலித்தனமாக இருக்கிறார். ஆரம்பத்தில் அதிரடி காட்டி பின்பு சூரியகுமார் யாதவுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்!” என்று கூறியிருக்கிறார்!