அகமதாபாத் அணிக்கு ஆல்ரவுண்டராக களமிறங்குவதில் உறுதி ; தோனி குறித்து பெருமையாக பேசியுள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா

0
1006
Hardik Pandya about MS Dhoni

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளதால் ரசிகர்களின் கவனம் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல் கிரிக்கெட் மீது திரும்பியுள்ளது. ஒரு மார்ச் மாத இறுதியில் தொடங்க இருக்கும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ முன்னர் அறிவித்திருந்தது. அதன்படி 2 புதிய அணிகள் ஆக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் பிசிசிஐ கூறியிருந்தது.

அதன்படி பழைய 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துள்ளோம் என்ற பட்டியலை அறிவித்து விட்டன. மேலும் 2 புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பதாகவே 3 வீரர்களை மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் பிசிசிஐ கூறியிருந்தது. அதன்படி அகமதாபாத் அணி ஹர்திக், ரஷித் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. மேலும் ஹர்திக் இந்த அணிக்கு கேப்டனாக இருப்பார் என்றும் அந்த அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்திக் பந்து வீசாமல் பேட்டிங் வீரராக மட்டும் விளையாடினார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்த இவர் உலகக் கோப்பை டி20 தொடரிலும் பந்து வீசவில்லை. அவரின் இந்த காயம் தான் மும்பை அணி அவரை விடுவித்ததற்கும் முக்கிய காரணம். ஆனால் தற்போது அகமதாபாத் அணிக்கு விளையாட உள்ள ஹர்திக் காயத்திலிருந்து குணமாகி விட்டதாகவும் இந்த ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டராக தான் விளையாட போகிறேன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பத்திரிக்கையாளர் போரியா உடன் பேசுகையில் ஹர்திக் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தோணி பற்றி இவர் பேசும் போது தோனி தனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்ததாகவும் தோனி தான் தன்னை செதுக்கியதாகவும் கூறியுள்ளார். தவறுகள் செய்ய அனுமதித்து அதன் மூலம் பாடம் கற்றுக்கொள்ள தோனி அனுமதித்ததாகவும் எப்போதுமே அவர் தனக்கு பின்னணியிலிருந்து உதவியதாகவும் ஹர்திக் கூறியுள்ளார். ஹர்திக் காயம் காரணமாக பந்து வீசாததால் இந்திய அணி ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இழந்து வந்தது. ஆனால் இனி அந்த கவலை தீர்ந்து விடும் என்று ரசிகர்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.