நிரந்தர டி20 கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா – பிசிசிஐ அறிவிப்பு!

0
1596

இனி டி20 போட்டிகளுக்கு நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் ஹர்திக் பாண்டியா.

ஆசியகோப்பை தொடரில் படுதோல்வி, டி20 உலக கோப்பை தொடர் அரையிறுதியில் படுதோல்வி என அடுத்தடுத்த பெரிய தொடர்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்விகளை சந்தித்ததால், அவரது கேப்டன் பொறுப்பு மீது பிசிசிஐ ஏமாற்றமடைந்துள்ளது.

- Advertisement -

டி20 போட்டிகளில் மட்டும் புதிய கேப்டன் நியமிப்பதற்கு முன்பு இருந்த தேர்வு குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். அந்த ஆலோசனையின் முடிவில் நியூசிலாந்து டி20 தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாட்டினார்.

ஹர்திக் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனில் கோப்பையை வென்று தந்திருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டு சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். இதன் அடிப்படையில் அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடரையும் வென்றார்.

அண்மையில் பிசிசிஐ மேல்மட்ட குழு அதிகாரிகள் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் . அதில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு ஓராண்டிற்கும் குறைவான காலமே இருப்பதால் அதில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கடைசியாக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வந்ததிலிருந்து இந்திய அணி ஒருமுறை கூட டி20 உலக கோப்பை வெல்லவில்லை. ஆகையால் மாற்றங்களை டி20 போட்டிகளில் இருந்து துவங்கலாம் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதலாவதாக கேப்டன் பொறுப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் என்ற முடிவுகளும் வந்திருக்கின்றன.

அதன் அடிப்படையில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நிரந்தர டி20 கேப்டன் ஆக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இம்முறை முழுவதுமாக இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்குவதற்கும் திட்டங்கள் தீட்டப்படுகிறது.

அடுத்து இரண்டு வருடங்களுக்கு இந்த அணி எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என்ற தகவல்களும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து தெரியவந்துள்ளது.