இந்தியாவின் தோல்விக்கு அர்ஷ்தீப் காரணமில்லை; ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு தான் காரணம் – முன்னாள் வீரர் காட்டம்!

0
298

போட்டியின் முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா இந்த தவறை செய்துவிட்டார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வெ இருவரும் களமிறங்கினர்.

- Advertisement -

பின் ஆலன் 35 ரன்கள் அடித்து அவுட்டானார். டெவான் கான்வெ 52 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 27 ரன்கள் விளாசி டெரல் மிட்ச்சல் அரைசதம் அடித்தார். இவர் 30 பந்துகளில் 59 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 176/6 ரன்கள் சேர்த்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அர்ஷதீப் சிங் விட்டுக் கொடுத்த 27 ரன்கள் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா என்று சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் பேசியதாவது:

- Advertisement -

“இந்த மைதானத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. ஹர்திக் பாண்டியா பெரிதளவில் ஸ்விங் செய்யமாட்டார். ஆனால் அர்ஷதீப் சிங் நன்றாக ஸ்விங் செய்வார். இப்படியிருக்க, ஹர்திக் பாண்டியா எதற்காக முதல் ஓவரை வீசினார். அர்சதீப் சிங் வீசியிருந்தால் நிச்சயம் விக்கெட்டுகள் விழுந்திருக்கும்.

ஹர்திக் பாண்டியாவின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்ததால் பின் ஆலன் நம்பிக்கையை பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் அவர் மோசமான ஃபார்மில் இருந்தார். அடிக்கடி முதல் ஓவர்லையே ஆட்டமிழந்து வந்தார். அவருக்கு இப்படி நம்பிக்கையை கொடுத்ததால் நல்ல துவக்கம் கொடுத்து விட்டார். விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய நேரத்தில் ஹர்திக் பாண்டியா செய்த இந்த தவறு இந்திய அணிக்கு மிக மோசமான துவக்கமாக பந்துவீச்சில் அமைந்துவிட்டது. ஒருவகையில் தோல்விக்கு இவரும் காரணம்.” என்றார்.