வீடியோ.. சாகல் நீ நகரு.. பூரனை தோனி ஸ்டைலில் கட்டம் கட்டி தூக்கிய ஹர்திக் பாண்டியா

0
382

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பாவல் அந்த அணி முதலில் பேட்டிங் செய்யும் என தீர்மானித்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

- Advertisement -

இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசிய சஹால் நான்காவது ஓவரில் பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி போட்டிக்குள் வருவதற்கு காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து ஏழாவது ஓவரில் சார்லஸ் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய தடுமாற்றத்தை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ரோமன் பாவல் மற்றும் நிக்கலஸ் பூரன் இருவரும் சிறப்பாக விளையாடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய பூரன் 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அறிமுகவீரர் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பாவல் மற்றும் பூரன் இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விக்கெட் விட்டுக்கொடுக்காமல் அவ்வப்போது பௌண்டரிகளையும் அடித்து கண்களை சேர்த்தனர் . இதனால் இந்த ஜோடி இந்திய அணிக்கு ஆபத்தான இணையாக உருவாகியது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் பிரிக்க கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்திவீச்சை தன் கையில் எடுத்தார் .

- Advertisement -

ஒரு முனையில் பந்து வீசிக் கொண்டிருந்த சகாலை நிறுத்திவிட்டு அந்த முனையில் இருந்து பந்து வீச வந்த ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்து அடிக்கும் திசையில் நிக்கோலோஸ் பூரணுக்கு பவுன்சர் வீசினார். அதனை புல் ஷாட் ஆடி சிக்ஸராக மாற்ற முயன்ற போது எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த திலக் வர்மாவின் கைகளில் வந்து தஞ்சம் புகுந்தது . இதனால் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிக்கோலஸ் பூரன் 41 ரன்களில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டம் இழந்தார். இதற்கான வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரோமன் பாவல் சிறப்பாக விளையாடி 48 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.