“கஷ்டப்பட்டு ஜெயித்தது எங்களோட பிளான்!” – ரோகித் சர்மா விளக்கம்!

0
7777
Rohitsharma

இலங்கைக்கு அடுத்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாட நியூசிலாந்து அணி தற்பொழுது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்திருக்கிறது!

நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியம் அளித்தார். இரவு மின் விளக்கு ஒளி மற்றும் பனிப்பொழிவில் இரண்டாவதாக பந்து வீசுவது கடினம்.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் மற்ற யாரும் பெரிதாக விளையாடாத பொழுது இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இரட்டை சதம் அடித்து இந்திய அணிக்கு பெரிய இலக்கத்தை கொடுத்தார். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் ஆறு விக்கெட்டுகளை 131 ரன்கள் தடுமாறியது. இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த பிரேஸ்வெல் மற்றும் சான்ட்நர் இருவரும் ஏழாவது விக்கட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை தந்தார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரேஸ் வெல் 140 ரன்கள் எடுத்து கடைசி விக்கட்டாக ஆட்டம் இழந்தார் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா ” உண்மையைச் சொல்வதென்றால் பிரேஸ்வெல் பேட்டிங் செய்யும் விதம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்று எங்களுக்கு முன்பே நன்றாக தெரியும். அவர் பந்துகளை மிகத் துல்லியமாக அடித்தார். நாங்கள் அவர்களின் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்திய பிறகு நாங்கள் ஆட்டத்திற்குள் வந்து விட்டோம் என்று தெரியும். ஆனால் இரவில் மின் ஒளி மற்றும் பனிப்பொழிவில் பந்து வீசும் கடினங்கள் எங்களுக்கு தெரியும். இது நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட சவாலாகும்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” கில் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமானது. அவர் பந்துகளை மிகச் சரியாக விளாசுகிறார். இலங்கைத் தொடருக்கு முன்பு நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தோம். அவர் அதற்கு முன்பு நிறைய ரன்கள் அணிக்காக கொடுத்தார். அவர் மிகவும் சுதந்திரமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். முகமது சிராஜ் இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகள் இன்னும் கொஞ்சம் தாமதமாகவே சிறந்த நிலைக்கு வந்தார். அவர் என்ன செய்ய நினைக்கிறார் என்பதில் தெளிவாக தற்பொழுது வலிமையிலிருந்து பெரிய பலத்திற்கு சென்று விட்டார். அவர் ஷார்ட் பந்தை பயன்படுத்த பயப்படவே இல்லை!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -