சிஎஸ்கே டீம்முக்கு நான் பெருசா ஒன்னும் பிளான் பண்ணல, எங்களோட திட்டம் ரொம்ப சிம்பிள் – ரஷித் கான் பேட்டி!

0
127

சிஎஸ்கே அணிக்கு எதிராக என்னுடைய திட்டம் மிகவும் எளிதாக இருந்து. அவர்களது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது தான் சற்று கடினமானதாக தெரிந்தது என்று ஆட்டநாயகன் விருது வென்ற ரஷித் கான் பேசி உள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று கோலாலமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டியில் குஜராத் அணி சிஎஸ்கே அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. டெவான் கான்வே ஒரு ரன், மோயின் அலி 23 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபுறம் நிறுத்தாமல் சிக்ஸர் மழைகளாக பொழிந்து கொண்டிருந்தார் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்.

இருப்பினும் எவரும் ருத்துராஜ் உடன் சீரான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. பின்னர் வந்த ராயுடு 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். அபாரமாக விளையாடி வந்த ருத்துராஜ் 50 பந்துகளில் 92 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சிவம் துபே 19 ரன்களில் அவுட்டாகினார்.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த தோனி, கடைசி ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரிகள் விளாச, அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 178 ரன்கள் ஆனது.

- Advertisement -

அதன் பிறகு பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சகா மிகச்சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்து 26 ரன்களில் அவுட் ஆனார். ஷுப்மன் கில் சர்வதேச பார்மை இங்கும் தொடர்ந்தார். 36 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இம்பாக்ட் பிளேயர் சாய் சுதர்சன் 22 ரன்கள், ஹார்திக் பாண்டியா 8 ரன்கள், விஜய் சங்கர் 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். போட்டியின் இறுதிவரை போராடிய சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது ரஷித் கான் அடித்த ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் ஆகும்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டபோது, ராகுல் திவாட்டியா ஒரு சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார். 19.2 ஓவர்களில் 158 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

பந்துவீச்சில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகள், பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர், பீல்டிங்கில் ஒரு கேட்ச் என ஒட்டுமொத்த ஆல்ரவுண்டராக செயல்பட்ட ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர் கூறுகையில்,

“முக்கியமான கட்டத்தில் பங்களிப்பை கொடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் ஆற்றலுடன் செயல்பட இது உதவும். பயிற்சியின்போது முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன், போட்டியின்போது மூன்று விதத்திலும் என்னுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று எண்ணுவேன். இந்த திட்டம் தான் எனக்கு உதவுகிறது.”

“சிஎஸ்கே அணியில் இடது கை பேட்ஸ்மன்களுக்கு பந்து வீசுவது சற்று கடினமாக இருக்கும். ஆகையால் சரியான இடத்தில் பந்துவீசி அழுத்தம் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆட்டத்தை நமது பக்கம் திருப்பி விடலாம் என்று எண்ணியிருந்தோம். இதற்கு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் எளிமையாக பந்துவீச வேண்டும் என்று நான் எண்ணினேன். அது நடந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.”

“பேட்டிங்கை பொறுத்தவரை, பயிற்சியின்போது எனக்கு முழு சுதந்திரத்தை ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர்கள் கொடுக்கின்றனர். அதை போட்டியிலும் வெளிப்படுத்த முடிகிறது. கடந்த சில சீசனங்களாகவே என்னுடைய பேட்டிங் நன்றாக வளர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த வகையிலும் பங்களிப்பை கொடுப்பது கூடுதல் மகிழ்ச்சி தான்.” என்றார்.