ஐபிஎல்ல தோனியை பத்தி.. அந்த விஷயத்தை சொன்னா சர்ச்சை ஆயிடும்.. மனசுக்கு சரி வரல – ஹர்பஜன் சிங் பேட்டி

0
100
Harbhajan

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடக்க இருப்பது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் தோனி குறித்தான ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி பேசினால் அது சர்ச்சையாக மாறிவிடும் என்று கூறி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு சில புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. அதில் பாராட்டப்படும் சில விதிகள் இருந்த போதிலும் சில எதிர்க்கப்படும் விதிகளும் இருக்கின்றன.

- Advertisement -

விமர்சனத்திற்கு உள்ளாகும் இரண்டு விதிகள்

அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்ந்து இருக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அசலான கிரிக்கெட் வடிவம் பாதிக்கப்படுகிறது என விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என பல முன்னணி வீரர்கள் கூறியிருந்த பொழுதும் இந்த முடிவில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் பின்வாங்கவில்லை.

மேலும் இந்திய அணிக்காக விளையாடி 5 வருடங்கள் ஆகியிருக்கும் வீரர்களை அன் கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அவர்களை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தோனியை வெறும் 4 கோடிக்கு சிஎஸ்கே தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த இரண்டு விதிகளும் வெளியில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.

- Advertisement -

நான் பேசினால் சர்ச்சையாகிவிடும்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனி முடிவில்லாதவர். அவர் பல காலமாக தொடர்ந்து ஐபிஎல் விளையாடியிருக்கிறார். இப்பொழுது அவர் அன் கேப்டு வீரர்கள் பட்டியலில் வருவார். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அவர் இப்பொழுது அன் கேப்டு வீரர்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் நல்ல உணவு சம்பளம் எதுவும் கிடைக்காது.. ஒரே வழி இதை செய்யணும் – பாக் முஹம்மத் அப்பாஸ் விமர்சனம்

“இதைப் பற்றி இப்பொழுது நான் என்ன சொன்னாலும் அது சர்ச்சையாக மாறிவிடும். அதே சமயத்தில் இந்த விதி தோனிக்கு மட்டுமே பொருந்தாது என்று நினைக்கிறேன். இதில் பயனடையும் வகையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற வீரர்கள் சிலர் திரும்பி வரலாம். அவர்கள் தங்கள் பெயரை ஏலத்தில் பதிவு செய்யலாம். இப்படி பெயரை பதிவு செய்ததற்கான வாய்ப்பில் நானும் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -