இந்திய கிரிக்கெட்

உஸ்மான் தாரிக் பவுலிங் இப்படி விளையாடுங்க.. கண்டிப்பா நாம பாகிஸ்தான ஜெயிப்போம் – ஹர்பஜன் சிங் பேச்சு

நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் உஸ்மான் தாரிக் பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மிக முக்கிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த போட்டியை சுற்றி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

கூடுதல் முக்கியத்துவம்

தற்போது பாகிஸ்தானின் மர்ம சுழல் பந்துவீச்சாளராக திடீரென பெரிய அளவில் பேசப்பட்டு வரும் உஸ்மான் தாரிக் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவரது வித்தியாசமான பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும்? என்பது குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உஸ்மான் தாரிக் பந்தை எறிவதாகவும் அவரை தடை செய்ய வேண்டும் எனவும் கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பதில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். இதன் காரணத்தால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

இப்படி விளையாடுங்கள்

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக்கூடாது என்று ஆசிய கோப்பை தொடரிலிருந்து பேசி வரும் ஹர்பஜன் சிங் உஸ்மான் தாரிக் பந்துவீச்சை எப்படி விளையாட வேண்டும்? என்று தற்போது இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பீர் அபிஷேக் விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க.. சஞ்சு சாம்சன்தான் சரியான ஆளு – ஆரோன் பின்ச் கருத்து

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் நல்ல பவுலர். எனவே அவருக்கு எதிராக நாம் பாதுகாப்பாக விளையாட வேண்டும். அதே நேரத்தில் இந்திய அணி மிகவும் திறமையானது. அவர்கள் எப்போதும் போல அழுத்தம் இல்லாமல் விளையாடுவார்கள். வெற்றி கொடியை அசைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by