கம்பீர் அபிஷேக் விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க.. சஞ்சு சாம்சன்தான் சரியான ஆளு – ஆரோன் பின்ச் கருத்து

0
11
Abhishek

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மாவை அவசரப்பட்டு களம் இறக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியிருக்கிறார்.

இந்திய அணி கடைசியாக விளையாடிய நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா களம் இறக்கப்படவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அடுத்த ஒன்று இரண்டு போட்டிகளுக்கு அவர் விளையாடுவது சந்தேகம் என கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கம்பீர் கவனமாக இருங்கள்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆரோன் பின்ச் கூறும்பொழுது “தற்போது இந்திய அணிக்கு எந்தவித பலவீனமும் கிடையாது. அவர்கள் நல்ல பலத்துடன் இருக்கிறார்கள். கடந்த போட்டியில் இஷான் கிஷான் உடன் இணைந்து சிறப்பான முறையில் அதிரடியாக சஞ்சு சாம்சன் இன்னிங்ஸை ஆரம்பித்தது முக்கியமானது”

“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் இரண்டாவது சுற்று மற்றும் அரைஇறுதிதான் இந்திய பார்வையில் மிகவும் முக்கியமான போட்டிகளாக இருக்கும். என்னை பொறுத்தவரையில் அபிஷேக் ஷர்மாவுக்கு உடல்நிலை சரியாகி விட்டால் அவரை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு கொண்டு வரக்கூடாது. ஏனென்றால் முதல் சுற்றை வைத்து நீங்கள் தொடரை வெல்ல முடியாது. தேவையில்லாமல் சிறந்த வீரரை இழந்து விடும் அபாயம் இருக்கிறது”

- Advertisement -

இதுதான் முக்கியம்

“மேலும் தற்போது அபிஷேக் சர்மாதான் உலக கிரிக்கெட்டில் அதிக அளவு சேதப்படுத்தக்கூடிய வீரராக இருக்கிறார். அவர் முழு உடல் நலத்துடன் திரும்பி வந்து சிறப்பாக விளையாட வேண்டியதுதான் முக்கியமான விஷயம். அதற்காக அவர் இன்னும் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டி இருந்தாலும் நீங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க : ஹர்பஜன் உங்களுக்கு மரியாதை இல்லாம பண்ணிடுவேன்.. மாத்தி மாத்தி பேசாதீங்க – பாக் தன்வீர் அகமத் விமர்சனம்

“இந்தியா பாகிஸ்தான் போட்டி எனும் பொழுது அது பெரிய விஷயம்தான். ஆனால் இருந்தாலும் நீங்கள் தொலைநோக்காக சிந்தித்துதான் இந்த விஷயத்தில் முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு தொடரில் முக்கியமான கட்டங்களான சூப்பர் எட்டு, செமி பைனல் மற்றும் ஃபைனல் போன்ற போட்டிக்குதான் சிறந்த வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -