ஆஸி தொடர்ல சிதைஞ்சு போச்சு.. கம்பீர் ரோஹித் ஒற்றுமை இல்லை.. ஆனா இதை நான் நம்புறேன் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
113

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணி ஒற்றுமையாக இல்லை என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் ரோகித் இடையே பிரச்சனை

கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பலமான அணிகளை எதிர்த்து வெற்றி பெறும் நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கொண்ட சீனியர் அணி முக்கியமான தொடர்களில் விளையாடும் போது தோல்வி அடைகிறது.

அதிலும் குறிப்பாக டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வரலாற்று தோல்வியாக அமைந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே பிரச்சனை என்று வெளியில் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அணிக்குள் ஒற்றுமை என்பது மிகவும் அவசியம் என்றும் ரோகித் சர்மா மற்றும் கம்பீர ஆகியோர் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடரில் சிதைந்து போனது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய அணிக்குள் ஒற்றுமை என்பது மிகவும் அவசியம். அது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சிதைந்து போனதாக தெரிகிறது. பயிற்சியாளருக்கும் அணிக்கும் இடையே வேறுபாடு மற்றும் பிரச்சனைகள் இருக்கிறது என்று வெளியில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

இதையும் படிங்க:கோலி இது மாதிரி அர்த்தமில்லாம செய்யக்கூடாது.. இனி இந்திய அணிக்கு பிரச்சனை இருக்கு – இயன் சேப்பல் பேட்டி

எனவே இந்த விஷயம் மிக விரைவில் சரியாகி விடும் என்று நம்புகிறேன். ஒரு அணிக்கு பயிற்சியாளரும், கேப்டன் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை இருக்கிறது” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். இந்திய அணிக்கு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரும் அதற்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரும் இருப்பதால் இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. எனவே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -