கோலி இது மாதிரி அர்த்தமில்லாம செய்யக்கூடாது.. இனி இந்திய அணிக்கு பிரச்சனை இருக்கு – இயன் சேப்பல் பேட்டி

0
90

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து தற்போது அதிக அளவிலான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மோசமான ஃபார்மில் விராட் கோலி ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியும் மூன்றாவது போட்டியில் டிரா மற்றும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி என்று வரிசையாக தோல்வி பாதையிலேயே பயணித்தது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மா மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்ஷிப் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஒரு போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் உரசலில் ஈடுபட்டது விராட் கோலி மீது கலவையான விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது போன்ற மோசமாக நடந்து கொள்ளக் கூடாது

இதுகுறித்து இயான் சேப்பல் கூறும்போது “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும் போது விராட் கோலியின் அனுபவம் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அவர்களின் பிரச்சனைக்குரிய பேட்டிங் ஃபார்ம் மீண்டும் உயிர்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு இவர்களின் நிலைத்தன்மையும் மேம்படுதல் வேண்டும்.

இதையும் படிங்க:ஓபனா சொல்றன் ரிஷப் பண்ட் ஜடேஜா வேண்டாம்.. இவங்க 2 பேர செலக்ட் பண்ணுங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை

எம்சிஜி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஷாம் கான்ஸ்டாஸின் மீது தோள் பட்டையில் இடித்தது போன்ற அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் அடுத்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் தொடரில் ஒரு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பது எந்த விதமான சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -