இந்தியாவிலிருந்து தப்பு கணக்கு போட்டுட்டேன்.. ஜெய்ஸ்வால் இதைச் செய்ய முடியாது – ஹர்பஜன் சிங் பேட்டி

0
70
Harbhajan

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் கணித்திருக்கிறார்கள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி 741 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி காலதாமதமாக வந்து அணியில் இணைந்ததால் விளையாட வில்லை. மேலும் அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக கொண்டுவரப்பட்டார். ஆனால் தொடக்க ஆட்டக்காரராக அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்தும், அமெரிக்க சூழ்நிலைகளில் யார் சரியாக இருப்பார்கள்? மேலும் ஜெய்ஸ்வால் எதன் காரணமாக விளையாட முடியாது? என்பது குறித்து ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

இது குறித்து ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “நியூயார்க் ஆ டுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் எனவே உங்களுக்கு இங்கு பெரிய வீரர்கள் தேவை. எனவே ரோகித் சர்மாவும் விராட் கோலியும் துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும். அவர்கள் அடித்தளத்தை உருவாக்க முடியும். பேட்டிங் செய்ய சாதகம் இல்லாத சூழ்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு இதை செய்வது கடினமானதாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்களுடன் டின்னருக்கு 25 டாலர்.. உங்களுக்கு இது வெட்கமா இல்ல – ரஷித் லத்தீப் விமர்சனம்

இந்தியாவில் நான் இருந்த பொழுது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய பங்கை வகிப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் தற்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு அன்றிச் நோர்க்கியா என்ன செய்ய முடிந்தது? என்பதை பார்த்தோம்” என்று கூறியிருக்கிறார்.