இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் முதல்ல பெரிய டீம்க்கு எதிரா ரன் அடிக்கணும்.. 75% திறமையைக் காட்டினாலே பைனலில் இருப்போம் – ஹர்பஜன் சிங் கருத்து

இன்று இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது செமி பைனல் போட்டியில் மும்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் ரன்கள் எடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. கடந்த இரண்டு முறையில் இரண்டு அணிகளும் தலா ஒரு முறை செமி பைனலில் வெற்றி பெற்று உள்ளன. இன்று வெல்லும் அணி இந்த செமி பைனல்களின் தொடர்ச்சியான மோதலில் ஆதிக்கத்தை செலுத்தும்.

சூரியகுமார் கவலை

இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் மீண்டும் பேட்டி பார்முக்கு திரும்பி வந்தார். மேலும் உலக கோப்பையில் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக தனி ஒரு வீரராக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவரது பேட்டிங் குறிப்பிடும் அளவில் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியிலும் அவர் மிகவும் சுமாராகவே விளையாடினார். குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிரான பெரிய போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

- Advertisement -

ரன் எடுக்க வேண்டும்

இதுகுறித்து தற்போது ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இந்திய அணி தற்பொழுது பேட்டிங் பௌலிங் என இரண்டு துறைகளிலும் முன்னேறி வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க போட்டியில் சூரியகுமார் மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இஷான் என தனிப்பட்ட வீரர்கள் யாராவது ஒருவர் அணியை வெல்ல வைக்கிறார்கள். ஆனாலும் சூரியகுமார் யாதவ் பெரிய போட்டிகளில் பெரிய அணிக்கு எதிராக ரன்கள் எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : இந்தியா பைனலுக்கு வராது.. இதுதான் கடைசில நடக்க போகுது.. உள்குத்தாக சொன்ன கெவின் பீட்டர்சன்

“இந்திய அணி தனது திறமையில் 75 சதவீதத்தை வெளிப்படுத்தினால் போதும் இங்கிலாந்து அணியை வென்று விட முடியும். என்னுடைய மொத்த இதயமும் இந்தியா பக்கமே இருக்கிறது அவர்களே வெல்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts