இந்தியா பைனலுக்கு வராது.. இதுதான் கடைசில நடக்க போகுது.. உள்குத்தாக சொன்ன கெவின் பீட்டர்சன்

0
12

இன்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனல் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாது என இங்கிலாந்து முன்னால் கேப்டன் கெவின் பீட்டர்சன் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை முதல் செமி பைனலில் நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஹாட்ரிக் மோதல்கள்

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் செமி பைனலில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது. தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இரண்டு அணிகளும் செமி பைனலில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி பைனல் வராது

இந்த நிலையில் இந்த மோதலில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: வான்கடே மைதானத்தை நினைச்சாலே இதெல்லாம் பயமா இருக்கு.. எங்க வீரர்களுக்கு இத சொல்லி இருக்கேன் – மோர்னே மோர்கல் பேச்சு

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் “நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக்கொள்ள இருக்கின்றன. இது மிகச் சிறந்த போட்டியாக இருக்கப்போகிறது” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் மறைமுகமாக இந்திய அணி பைனல் வராது என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -