2 வருஷமா ரோஹித் இந்த பிரச்சினைல இருக்காரு.. இதை மட்டும் சரி செஞ்சா அவர்தான் பெஸ்ட் – ஹர்பஜன் சிங் கருத்து

0
33

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான நிலையில் இருக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் 3 ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னில் வெளியேறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களும்,இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்களும் குவித்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்து வலுவாக இருப்பதால் இந்தப் போட்டி இந்திய அணிக்கு சிக்கலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் அவரது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். ரோஹித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே லைன் அண்ட் லென்த்தில் தடுமாறி வருவதாகவும் இதற்குப் பிறகு சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து நிச்சயமாக ஏமாற்றம் அடைவார். அவர் மோசமான ஷாட் விளையாடியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் தன்னை தற்காத்து விளையாட முயன்ற போது அவர் ஆட்டம் இழந்திருக்கிறார். இந்தப் பகுதியில் ரோகித்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வீசப்பட்டு வருகிறது. அவர் ஸ்டம்ப் லைனில் சிறிய தவறுகளை செய்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு நெருக்கடி.. காயம் அடைந்த பும்ரா.. இந்திய பவுலிங் கோச் கொடுத்த அப்டேட்.. முழு விபரம்

ரோகித் சர்மா அடுத்த மூன்று போட்டிகளுக்கு முன்பாக இந்த பகுதியில் பணியாற்றுவார் என்று நினைக்கிறேன். மேலும் ஒரு கேப்டனாக ரோஹித் தனிப்பட்ட அளவில் ரன்கள் எடுத்தால் மட்டுமே கேப்டனாக செயல்பட முடியும். ஒரு கேப்டன் ரன் எடுக்காத போது கேப்டனாக சிறப்பாக செயல்படுவது அரிதான விஷயம். எனவே இதில் ரோகித் முன்னேறுவார்” என நம்புவதாக ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.

- Advertisement -